ராஜாமணி/பிம்பச் சிறை

“சிறந்த நடிகை” விருதுடன் அனிதா விழாவிலிருந்து வீட்டுக்குத் திரும்பினாள்.விழாவின் ஒளியும் கைதட்டலும் வீட்டுக்குள் வரவில்லை; பெரிய மாளிகை அவளின் தனிமையைக் கூட்டியது.நகைகளை கழற்றி, ஒப்பனைகளை துடைத்து சோபாவில் அமர்ந்தாள்.டிவியில் இளம் நடிகைகள், “அனிதா எங்கள் ஆதர்சம்” என்றார்கள்.அதை கேட்ட அனிதாவுக்கு மனம் வலித்தது.அவள் கனவு மருத்துவராக வேண்டும் என்பதே.அம்மாவின் ஆசையால் அவள் நடிகைகயானாள்..இருபது ஆண்டுகள் மேடை, வெளிச்சம், காமிராவுடன் சென்றன. இளைஞர்களின் கனவுக்கன்னி. கட்டமைக்கப்பட்ட பிம்பம். அந்த பிம்பத்தைத் தக்க வைத்துக்கொள்ள பல சிகிச்சைகள், முகப்பூச்சூகல் .……. தலையில் பொய்முடி… . ஒப்பனை இல்லாமல் அவள் வெளியே வருவதில்லை..போஸ்டர்களில் அவள் எப்போதும் அழகாக இருந்தாள்.கண்ணாடியில் பார்த்த முகம் அவளுக்கே புதிதாகத் தோன்றியது.வலியுடன் அவள் ஒரு ஓவியம் வரைந்தாள்;.அந்த ஓவியத்தில்த்தான் அவள் தன் உண்மையான முகத்தை கண்டாள்.
வாழ்வை தொலைத்து கட்டமைக்கப்பட்ட பிம்பத்தையும் உதற முடியாமல் அந்த பிம்பச்சிறைக்குள் கைதியாக இருப்பதை ஓவியம் காட்டிக்கொண காட்டிக்கொண்டிருந்தது,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன