நாபா.மீரா/சித்திரம் பேசுதே

அப்பா எங்க ஸ்கூல்ல சித்திரக் கதைப்போட்டி ஒண்ணு அறிவிச்சிருக்காங்க…நா நல்லா ஓவியம் வரைவேங்கறதால எங்க கிளாஸ் மிஸ் என் பெயரைக் கொடுத்திட்டாங்க.
உங்களத்தாம்பா நம்பியிருக்கேன் என்ற ஹரீஷிடம்….
ஜமாய்ச்சுடலாம் கண்ணா…. சிறிது நேரம் செலவழித்து ஒரு காட்சியை மையப்படுத்தி ஓவியம் ஒன்று வரைந்து நீட்டினார்.
சுத்தியிருக்கிற காட்சி புரியுது. படம் கண்ணு முன்னாடி வந்து பேசறாப்பல ஒரு உணர்வு.
ஆனா அது என்ன ஒரு முகம் மாதிரி…. அதுல ஒரு கண் இருக்குற பகுதிய ஒட்டி கழுகும்…தலைப்பகுதியில கருஞ்சிறுத்தையும் வரைஞ்சிருக்கீங்க….
அதுதாண்டா கதையோட ஹைலைட்டே…. சிறுத்தை மாதிரி வேகம் முக்கியந்தான்…அதே சமயம் வாழ்க்கையில ஜெயிக்கிறதுக்கு கழுகு மாதிரி விசாலமான தொலைநோக்குப் பார்வை அவசியம்… என்ன தீம் புரிஞ்சுதா…
சூப்பர்பா…. நல்லா வரைஞ்சு எப்படிப் பரிசைத் தட்டறேன்னு பாருங்க…. சொல்லிவிட்டு நில்லாமல் பிராக்டிஸ் பண்ண விரைந்தான்.ஹரீஷ்.

One Comment on “நாபா.மீரா/சித்திரம் பேசுதே”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன