மீ. விசுவநாதன் கவிதைகள்

13.02.2025 அன்று நடந்த விருட்சம் கவி அரங்கத்தில் வாசித்த மீ விஸ்வநாதன் கவிதைகள்

வீண் என்பதே இல்லை

வீசிய எச்சில் இலைகளே
தெருநாய், காக்கை, குருவி,
எறும்புகளுக்கு அறுசுவை உணவு!

விலங்குகள் பறவைகளின் கழிவே
காடுகள் செழிக்க உதவும் உரம்!

நகர வளர்ச்சியில்
ஏரி, குளங்களை மூடிய
குப்பை மேட்டில்
அடுக்கு மாடிகள்,
சரித்திரச் சின்னமாய்
வள்ளுவர் கோட்டம்!

நல்லிசை, வல்லிசை,
மெல்லிசை எல்லாமே
உயிர்ப்புள இசையே!

குப்பை என்று
இங்கு
எதுவுமே இல்லை.

இன்பதுன்பக் குப்பைகள் குவிந்த
மனமே
மாசிலா இறைவனின் கோட்டம்.!

நல்லதே நடக்கும்

ஊரெங்கும் நாதசுவரம் ஒலித்திட வேண்டும்
உறவெல்லாம் ஒற்றுமையாய் வாழ்ந்திட வேண்டும்
தீராத பகைநீங்கி நட்பென வேண்டும்
திக்கெங்கும் அன்புமழை பொழிந்திட வேண்டும்
போரில்லா பூமியென சாந்தியும் வேண்டும்
பொல்லாத கீழ்மனங்கள் திருந்திட வேண்டும்
ஓயாமல் வேதஒலி கேட்டிட வேண்டும்
உயர்கல்வி எல்லோர்க்கும் வாய்த்திட வேண்டும்
சேயுள்ளம் பயமின்றிச் சிரித்திட வேண்டும்
செந்தமிழால் நாவினிக்கக் கொஞ்சிட வேண்டும்
நூறென்ன கோடிமுறை வேண்டிடு வேனே
குருநாதன் திருவடியில் குவிந்திருப் பேனே.

“வீண் என்பதே இல்லை”

வீசிய எச்சில் இலைகளே
தெருநாய், காக்கை, குருவி,
எறும்புகளுக்கு அறுசுவை உணவு!

விலங்குகள் பறவைகளின் கழிவே
காடுகள் செழிக்க உதவும் உரம்!

நகர வளர்ச்சியில்
ஏரி, குளங்களை மூடிய
குப்பை மேட்டில்
அடுக்கு மாடிகள்,
சரித்திரச் சின்னமாய்
வள்ளுவர் கோட்டம்!

நல்லிசை, வல்லிசை,
மெல்லிசை எல்லாமே
உயிர்ப்புள இசையே!

குப்பை என்று
இங்கு
எதுவுமே இல்லை.

இன்பதுன்பக் குப்பைகள் குவிந்த
மனமே
மாசிலா இறைவனின் கோட்டம்.!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன