
என்னை இனிமேல் அம்மா
ஏமாற்ற முடியாது, ஏனென்றால்
நான் சிறுவன் அல்ல
என்னை இனிமேல் தத்துவங்களும்
அரசியலும் ஏமாற்ற முடியாது.
ஏனென்றால்
நான் இளைஞன் அல்ல
என்னை இனிமேல் மதமும்
கலையும்
ஏமாற்ற முடியாது. ஏனென்றால்
நான் நடுத்தர வயதினன் அல்ல.
என்னை இனிமேல்
மாத்திரைகளும் மரியாதைகளும்
ஏமாற்ற முடியாது ஏனென்றால்
நான் முதியவனல்ல. நான்
இப்போது மூப்பைக் கடந்தவன்,
சின்னஞ்
சிறு குழந்தையைப் போல.
யாராவது என்னை லேசாக
விரலால் தொட்டால் போதும்
எனக்குள் சுடர்கிறது
ஒரு பொற்கணம்
இப்போது நான் அணிந்திருக்கும்
பழைய ஆடைக்குள்
ஏமாறுவதற்கு யாரும் இல்லை
