
அங்கிங்கெனாத படி
எங்கும் நிறைந்தவனாம்!
பாமாலை பல பாடி
மூச்சை உள்ளடக்கி
பூக்களால் அர்ச்சித்து
காணக் கிடைக்காதவன்,
தெருவோரம் துவண்டு
படுத்திருந்த பாட்டிக்குப்
பசியாற பணம்
அளித்தபின் அவள் வாயிலிருந்து
வந்த வார்த்தை ‘தெய்வமே’..!
என்னுளிருக்கும்
தெய்வத்தை இன்று நான்
கண்டுகொண்டேன்!
தெய்வமே! உனக்கு நன்றி!
-.

One Comment on “விருகை சங்கரன்/தெய்வமே!”
Comments are closed.