எல்.ரகோத்தமன்/மழை மேகம்

கணிக்க முடியாமல்
கனியாத நீர் துளிகளை
சுமந்த மேகக்கூட்டம்
அங்கும் இங்கும் அலைந்து
கொண்டிருந்தன வானில்!

எப்போது கனியும்!
எங்கு போய் கொட்டித்தீர்க்கும்?

சில்லென்ற மழைத் தூரல்
காற்றில் தவழும் மண்வாசனை
வானவில்லின் வசீகரம்
மழை ஓய்ந்த அமைதி
ஈரம் கலந்த குளிர் காற்று
பச்சிலை சொரியம் நீர் முத்துகள்
சிறகு சிலிர்க்கும் பறவைகள்
விரிந்த கருங்குடைப் பூக்கள்

ஒரு
மழைப்பொழிவின் கனவோடு
அலைந்த எண்ணங்கள் யாவும்
கரைந்துபோனது!

பொல்லாத மேகங்கள்
சூலுற்றுக் கொட்டித் தீர்த்தது
கடலில்!

வானம் பார்த்து
வெறுமை கொண்டது மனம்!

24-02-2026

விருகை சங்கரன்/தெய்வமே! – விருட்சம் நாளிதழ்

One Comment on “எல்.ரகோத்தமன்/மழை மேகம்”

Comments are closed.