பி.ஆர்.கிரிஜா/தோற்றம்

ரமாவிற்கு தன்னுடைய ஒரு கால் மற்றொரு காலை விட சின்னதாக இருப்பதால் சற்றே விந்தி நடப்பாள். ஆரம்பத்தில் பள்ளியில் படிக்கும்போது சக மாணவ மாணவிகள் கேலி செய்யும்போது அழுகை முட்டிக் கொண்டு வரும். நாளடைவில் அவற்றை எதிர்கொள்ள ஆரம்பித்தாள். அவள் அப்பாவின் ஊக்கம் அவளை நம்பிக்கையுடன் செயல் பட வைத்தது. கல்லூரியில் இளங்கலை ஆங்கிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வாங்கினாள். அவள் படி ஏறும்போது விந்தியபடி நடப்பதைப் பார்த்து அங்கிருந்த ஒருவர் அவளைத் தாங்குவதற்குச் சென்றார். அவள் வேண்டாம் என்று உறுதியாகச் சொல்லி சாய்ந்தபடி சென்று பரிசினை கம்பீரமாகப் பெற்றாள். அவையில் ஒரே கரவொலி. முதல் வரிசையில் அமர்ந்திருந்த அவள் அப்பா பெருமையுடன் தன் அருகில் இருப்பவரிடம் சொன்னார்..” என் மகள், அனைத்திலும் பங்கு பெற்று பரிசுகள் வாங்கிக் கொண்டே இருக்கிறாள்” என்று. ஊக்கமும், தன்னம்பிக்கையும் இருந்தால் எந்தத் தடையும் ஒரு பொருட்டல்ல என்பதை ரமாவின் மூலம் மற்ற மாணவ, மாணவிகள் நன்கு புரிந்து கொண்டனர்.

25/02/2026

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன