சந்தியா ஷங்கர்/அந்த கனவு

அந்த கனவு அவளுக்குத் தினமும் இரவில். ஏதோ ஒரு உருவம் அவளிடம் என்னமோ எதிர்பார்த்து நிற்கிறது. அந்த உருவத்தை உத்து பார்த்தாள் மங்கா.
தலை ஒருபுறம், கைகள் பக்கவாட்டில் இல்லாமல் பொம்மலாட்டம் மாதிரி உணர்விழந்து, கால்கள் மட்டுமே தாளம் போடும் விதத்தில்.
என்ன உருவம் இது புரியாமல் ஒண்ணு. மங்கா ஒரு நாட்டியம் பயின்றவர். பரதம், குச்சி பிடி எல்லாவற்றையும் கரைத்து குடித்தவள். ஆனால் பாரம்பரியம் மிக்க பெண்மணி.
மேற்கிந்திய நடனம் எல்லாம் ஆடினால் மதிப்பு கிடையாது, கடவுள் மன்னிக்க மாட்டார் என்று ஆழ்ந்த நம்பிக்கை.
ஒரு முறை டீவியில் ஒரு நடன நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு வெளிநாட்டுப் பெண் எப்படி நம்ம பாரம்பரிய பாரதத்தை கற்றுக்கொண்டு ஆடும் விதத்தை ர
ரசித்தாள்.
திடீரென அவளின் நாட்டியம் நிறுத்த பட்டு பக்கத்தில் வேறு ஒரு பெண்ணின் ஆட்டம் காட்டப்பட்டது.
அது மங்கா தன் கனவில் கண்ட அதே உருவம். அதே அமைப்பு.
மங்காவின் ஆர்வம் அதிகரித்தது. என்னது அது என்று கவனிக்க ஆரம்பித்தாள்.
ஒரு ஐந்து நிமிடத்திற்குப் பிறகு ஒரு அறிக்கை கேட்டது. “நீங்களும் உங்களின் உருவத்தை, நடனத்தை ஏ ஐ உபயோகித்து இப்படி மாற்றலாம். இப்ப நீங்கப் பார்த்தது அந்த மாதிரி ஒரு மாடல் தான்.
உங்களில் விருப்பம் உள்ளவர்கள் இந்த மாதிரி அவரவர் உருவத்தையும் ஏ ஐ மூலமாக மாற்றி கீழே கொடுக்கப் பட்ட எண்ணுக்கு வாட்ச்சப் பண்ணுங்க. சிறந்த மாற்றத்திற்குச் சன்மானம் வழங்கப் படும்.

One Comment on “சந்தியா ஷங்கர்/அந்த கனவு”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன