ஆண்டிற்கொரு விழா /கிராமிய பாடல்கள்

தொகுப்பு :  நா வானமாமலை 

சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன் இடம் : சேலம் மாவட்டம்

நிலம் விளைந்து நல்ல மேனி கண்டு ஆண்டு முழுதும் உழவன் செய்த முயற்சி பயன் கொடுத்து, உழவன் இடையூறு வராமல் பயிரைப் பாதுகாத்து அளித்த தெய்வங்களுக்குக் கொடை கொடுக்கிறான்.  பிள்ளையாரும் அத் தெய்வங்களுள் ஒருவர்.  இவர் மற்றைக் கிராம தேவதைகளைப் போல இறைச்சி தின்பவரல்ல.  இவர் வகை வகையாகப் பணியார பண்டங்களை ருசியாக உண்பவர்.  நல்ல மேனி கண்ட மனநிறைவோடு, உழவர்கள் அரச மரத்தடி பிள்ளையார்க்கு, மாவுருண்டையும், எள்ளுருண்டையும், கொழுக்கட்டையும் பண்ணிப் படைக்கிறார்கள்.

        மாட்டுக் கொளப்படையில்
        மாவுருண்டை ஆயிரமாம்,
        எருதுக் கொளப்படையில்
        எள்ளுருண்டை ஆயிரமாம்
        ஆட்டுக் கொளப்படையில்
        அதிரசம் ஆயிரமாம்.
        கண்ணுக் கொளப்படையில்
        கடலுருண்டை ஆயிரமாம்.
        குட்டிக் கொளப்படையில்
        கொழுக்கட்டை ஆயிரமாம்.
        பண்ணிக் கொளப்படையில்
        பணியாரம் ஆயிரமாம்
        இத்தனையும் ஒப்பதாம் - எங்க
        சப்பாணிப் பிள்ளையார்க்கு.

வட்டார வழக்கு :

கொளப்படை – கொட்டகை
பண்ணி – பன்றி

சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன் இடம் : சேலம் மாவட்டம்

One Comment on “ஆண்டிற்கொரு விழா /கிராமிய பாடல்கள்”

  1. 1988/1989 இல் சென்னை தூர்தர்ஷன் இரண்டாம் சேனலில் நானும் திருப்பூர் கிருஷ்ணனும் நா. வானமாமலை அவர்களின் ‘நாட்டுப்பறப் பாடல்கள்’ நூலை விமர்சித்து உரையாடியது நினைவுக்கு வருகிறது!

Comments are closed.