
13-3-26 விருட்சம் இணையவழிக் கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த 4 கவிதைகள்
1.எழுதி வைப்பேன்
இந்த மழைத்துளி
இதோ வந்துகொண்டிருக்கிறது
வானம் எனும் ஊரிலிருந்து
நெடுந்தொலைவு பயணம் செய்து
மண் நோக்கி வரும் இதை
வரவேற்க நினைக்கிறேன்.
மனத்துள் மத்தாப்பை ஒளிரச்செய்து
மகிழ்ச்சி வெண்சாமரம் வீசும்
உயிர்நிலைக்காக நான்
உவகையுடன் காத்திருக்கிறேன்.
விதை முளைத்துக் கிளம்பி
விறுவிறுவென்று
மேல்நோக்கித் தலைகாட்டிச்
சிரிக்கின்ற நாளுக்காக
விழுகின்ற தோழமை அது.
ஒன்றிரண்டாய் மட்டுமன்று
நான்கைந்தாய்ப் போதாது
ஓராயிரமாய்ப் பல்லாயிரமாய்
படையெடுத்து வருகவெனப்
பதைபதைக்கக் காத்திருக்கிறேன்
வெளிச்சக் கீற்றுகளும்
வெடிச்சத்தமும்
துணையாக வந்துவிடும்
இந்நாளை
எழுதிவைப்பேன் மனத்துள்ளே.
- கொட்டும் மழை
இத்தனைநேரம் இறுமாப்புடன்
இதழோரம் புன்னகையுடன்
இளநடை போட்டவர்கள்
இப்போது ஒதுங்க இடம்
இதோ தேடுகிறார்கள்.
அவசர அவசரமாக
வீதிக் கடைக்காரர்கள்
நிர்வாணப் பொருள்களுக்கு
ஆடை உடுத்துகிறார்கள்.
படித்ததெலாம் மறந்துவிட்டால்
பாதையிலே எதை வைப்பதெனும்
பதைபதைப்பில் சில பேர்கள்.
முதலாளி பூதத்தின் வாயில்
மூழ்க வேண்டுமெனும்
முணுமுணுப்புடன் ஓட்டம்.
வீதியெலாம் சிறுசிறு
குட்டையாகி விடுமென
விதியை நொந்துகொண்டு
விழியில் கவனமாக
விரையும் உயிரினங்கள்.
ஆக
வரவேற்க யாருமின்றி
கொட்டிக்கொண்ட
3.உற்சாகம்
காலையில் எழுந்ததும் மனைவி
காப்பி இல்லையென்றாள்.
காப்பிப்பொடி தீர்ந்துவிட்டதாம்.
எங்கே வரும் உற்சாகம்?
காய்கறிக்காரி வந்தார்
காய்கறிகள் எல்லாமும்
கால்கிலோ இருபது ரூபாய்
எங்கே வரும் உற்சாகம்?
செய்தித்தாள் விழுந்தது
சேர்த்தெடுத்துப் படித்தேன்
முதல் பக்கம் நகைக் கொள்ளை
இரண்டாம் பக்கமோ
இளஞ்சிறுமி வன்புணர்வு
மூன்றாம் பக்கம்
மூன்று கொலைகள்.
எங்கே வரும் உற்சாகம்?
அஞ்சல்காரர் வந்தார்
ஆறேழு சிற்றிதழ்கள்
அழகாய் வந்தமர்நதன.
அவற்றைப் புரட்டினேன்
அனைத்துக் கவிதைகளும்
அடியேனுக்குப் புரியவில்லை.
எங்கே வரும் உற்சாகம்?
ஆனால்
இதோ இதோ இவற்றால் எல்லாம்
இங்கொரு கவிதை பிறந்ததே
மனத்தில் உற்சாகம்! உற்சாகம
4.முதல்கல்
முதல் கல்லை எறியும்போதுதான்
சற்று அச்சமாக இருக்கும்
யாரேனும் பார்க்கிறார்களா
என்ற பதற்றமும் இருக்கும்.
பிறகு கண்கள்
தாமாக இமைப்பது போலப்
பழகிவிடுகிறோம்.
அடுத்த கல்லெறிதல்கள்
உற்சாகத்தையும் உள்ளே
ஒரு மகிழ்ச்சியையும் தருகின்றன.
அணை உடைந்துவரும்
அடர்வெள்ளம் போல
கல்லெறிதல் மிக வேகத்துடன்
பீறிட்டுக் கிளம்புகிறது.
ஏனெறிந்தாய் என்று கேட்க
எவருமே இல்லாத போது
தொற்றுநோய் போலத்
தொடர்கிறது.
செய்துகொண்டே இருக்கிறாய்
பின்னால் வரும்
கற்களைக் கவனிக்காமல்
சசிகலா விஸ்வநாதன் வாசித்தளித்த 3 கவிதைகள் – விருட்சம் நாளிதழ்

68wim seems like a fun place to hang out and play. The community aspect seems big, which is cool. Give it a look for some new friends and games! Check the site 68wim.