
.
இரவின் காவல் தேவதை
தாலாட்டு பாடியவாறு
உறக்கத்தின் தொட்டிலை
முன்னும் பின்னுமாக மெல்ல அசைகிறது
இமை மூடி துயிலும் விழிகளுக்குள்
ஓராயிரம் கனவுகளை நனவாக்கும்
கற்பனைகளை மிதக்க விட்டபடி
நட்சத்திரமாக மின்னும்
நம்பிக்கை ஒளிச் சிதறல்கள்
சேகரிக்கும் மானுடம்
விடியலின் முதற் ஒளிக்கீற்று களை காண
ஆர்வத்துடன்
சுவாசிக்கும் இதயம்


Nice