நாகேந்திர பாரதி/அளவுகோல்கள்

தன்னை அளப்பதற்குத்
தயாரித்த அளவுகோலை

மற்றவரை அளப்பதற்கு
மாற்றி முயற்சித்தால்

வளையும் நெளியும்
ஒடியும் உடையும்

அளவுகோல் இழப்பது
அவரவர் இஷ்டம்

அவரவர் கையில்
அவரவர் அளவுகோல்