அர்ஜுனன்/மர்ம ஓவியம்

காட்டின் எல்லையில் இருந்த குகையின் சுவற்றில் வரையப்பட்ட அந்த பெண் ஓவியம் சற்று வித்தியாசமானது.
அவளது கழுத்து சாய்ந்திருப்பதும், ஒற்றைக் கண்ணோடு இருப்பதும் பார்த்தவுடன் தெரியக் கூடியவை.
அதன் கையில் தெரியும் சிவப்புக் கோடு, ரத்தக் கறை என்றும் அந்த ஓவியத்தின் பக்கத்தில் சென்றவர்கள் விழுங்கப்பட்டு விடுவர் என்று எல்லோரும் கூறுவார்கள்.
இதைப் பார்க்க நகரத்தில் இருந்து புதியவன் ஒருவன் வந்தான்.
யாருமில்லாத நேரத்தில் வந்த அவன்..
“இது ஒரு சாதாரண பழைய ஓவியம் தான்” என்று சொன்னபடியே, ஓவியத்தின் கைகளைத் தொட்டான்.
உடனே அவன் உடல் முழுவதும் ஓவியத்தின் கையிடுக்குகளில் சிக்கிக் கொண்டது.
அடுத்த நிமிடமே அந்த ஓவியத்தின் ஒற்றைக் கண் சுழல ஆரம்பித்தது.
அந்தப் பெண் ஓவியம் சப்தமாக சிரித்தது.
“ஒற்றைக் கண் பிசாசு யாரையோ சாப்பிடுகிறது, யாரும் அங்கு செல்ல வேண்டாம்” என்று ஊரில் பேசிக் கொண்டார்கள்.
மறுநாள் அந்த ஓவியத்தின் கைகளில் புதிய ரத்தம் வழிந்து கொண்டிருக்க, எலும்புக் குவியல் மட்டும் வெளியில் காணக் கிடைத்தது.
*

One Comment on “அர்ஜுனன்/மர்ம ஓவியம்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன