"அம்மா இங்கே வந்து பாரேன் என் ஓவியத்தை " என தன் இனிய குரலால் காஞ்சனாவைக் கூப்பிட்டாள் கவிதா .
" இவள் ஒருத்தி சரியான படுத்தல், நான் சமைப்பேனா? வீட்டு வேலைகளைப் பார்ப்பேனா? உன் ஓவியத்தைப் பார்ப்பேனா? .
அதான் எப்பப் பார்த்தாலும் என் மகாராணின்னு உன்னைக் கொஞ்சும் உங்க அப்பா கிட்ட காட்ட வேண்டியது தானே" என்றாள் காஞ்சனா.
" நீ வேறே, இதைப் பார்த்து அப்பா ஒண்ணும் புரியலைன்னு சொல்லிட்டு ஓடிட்டார் மா . உனக்கு புரியுமோன்னு தான் கூப்பிட்டேன்".
" அத்தோடு நீ மட்டும் இதைப் பார்த்து சரியா சொல்லி விட்டால் கண்டிப்பாக எனக்கு எங்க கல்லூரி ஆண்டுவிழாவுக்காக நடக்கும் போட்டியில் பரிசு கிடைக்கும்னு நம்பறேன் மா".
" என்னடி செல்லம் இப்படி பெரிய பொறுப்பை தலையில் வைக்கிறியே . இரு கொஞ்சம் பொறுமையா பார்க்கிறேன்".
"கழுத்தில் போட்டிருப்பது ஏதோ விலங்கு பூட்டிய மாதிரி தோணுது. தலையை ஒரு பக்கம் சாய்த்திருப்பது தனக்குப் பிடித்திருக்கு என்றால் ஒரு மாதிரியும், இல்லையெனில் ஒரு மாதிரியும் நடப்பவளோ ?. பார்வை ஒற்றைக் கண்ணில் என்பது எந்த விஷயத்தையும் நியாயமா யோசிக்காது ஒரு சார்பா யோசிப்பவளைக் குறிக்குதோ? "
" என் செல்ல அம்மா, நீ அதிபுத்திசாலி. சரியா தான் சொல்கிறாய். அந்த விலங்கு கூட நான் பெண் என்பதால் என்னால் முடியாது என்று தானே மனசில் நினைப்பதன் குறியீடு " என்றபடி மகிழ்ச்சியாகக் கட்டி அணைத்தாள் கவிதா தன் தாயை.
One Comment on “கரந்தை இந்து/ஒற்றைக் கண்ணி ஓவியம்”