நாபா.மீரா/எது அழகு

மாநில அழகிப் போட்டிக்கு அணிவகுத்து நின்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த முதன்மை நடுவர் அருகில் அமர்ந்திருந்த சக தோழியிடம்….
அதோ…அங்கே பேக்கு மாதிரி முழிச்சிட்டு உட்கார்ந்திருக்கே…. தமிழ்நாட்டில ஏதோ கிராமமாம்…. இதெல்லாம் இந்தப் போட்டியில் கலந்துக்கலைன்னு யாரு அழுதா….
முதலில் நடைபெற்ற கேட் வாக் கூட சுமாராகத்தான் செய்தாள் பைரவி என்று அழைக்கப்பட்ட அந்தப் பெண்.
பரிசு அறிவிக்கப்பட்டது.அனைவருக்கும் ஆச்சரியம்.வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றது சாட்சாத் பைரவிதான்.
கிராம கவுன்சிலரான பைரவி… சிறந்த உத்திகள் புகுத்தி தங்கள் கிராமத்தில் இருந்த தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவதில் பெரும்பங்கு வகித்தது…
நடுவர்களின் விவசாயம் சார்ந்த கேள்விகளில் தெரிந்தது.
அறிவை ஆற்றலாக மாற்றிய கிராம தேவதை என்று நடுவர் குழு ஒருமித்த தீர்மானம் கொண்டுவர …..
அனைவரின் முன்பும் பிட்டுப் பிட்டு வைக்கப்பட்ட பைரவியின் திறமையில் முதலில் அவளை தரக்குறைவாக விமர்சனம் செய்த நடுவர் முகத்தில் ஈயாடவில்லை.

கரந்தை இந்து/ஒற்றைக் கண்ணி ஓவியம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “நாபா.மீரா/எது அழகு”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன