முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/பார்வையின் பொருளென்ன?

அந்த மதுமிதாவைப் பார்த்தாலே சுரேஷுக்குப் பிடிக்காது.அவளும்,அவளது பல வண்ண உடையும்,ஒற்றைக் கண் பார்வையும்!
அவளுக்குக் கண்டிப்பாக வயது முப்பத்தைந்தைக் கடந்திருக்கும்.எப்பொழுது பார்த்தாலும் கல்லூரி மாணவனான சுரேஷைப் பார்ப்பதும், காரணமின்றி சிரிப்பதும் அவனுக்கு வெறுப்பையே தந்தன.நண்பர்கள் வேறு இவனை,” பார்ட்டிக்கு ஒரு கண் இல்லை மச்சி.வயசு அதிகம்.ஆனால் அழகா இருக்கறதுனால் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”, என்று இவனைக் கலாய்த்து வந்தனர்.
ஹோலி பண்டிகையன்று அப்படித்தான்.
தெருமுனையிலிருந்தே மதுமிதா இவன் வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்து விட்டு, சற்று மெதுவாகவே வீட்டை அடைந்தான்.
ஹிந்தி கலந்த அரைகுறைத் தமிழில் மதுமிதா அம்மாவிடம் தான் கொண்டு வந்திருந்த இனிப்பு வகைகளைத் தந்து சுரேஷுக்குத் தரச் சொல்லிச் சொன்னதும், அம்மா, “சுரேஷிடம் ஏன் உனக்குத் தனி அக்கறை ?”என்று கேட்டதும் காதில் விழுந்தன.உள்ளே நுழையாமல் காதைத் தீட்டிக் கொண்டான்.
“எனக்கு ஒரு தம்பி சுரேஷ் மாதிரியே அச்சு அசலாக இருந்தான்.கிட்டத்தட்ட சுரேஷ் வயதில்தான் ஒரு விபத்தில் இறந்து போனான்”, என்றதும்,” அதனால் என்ன ? நீ எனக்கு மகளாக இந்த வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிரு.சுரேஷுக்கும் அக்காவாகவே இரு”, என்று வாஞ்சையுடன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த சுரேஷின் விழிகளிலும் நீர்!

நாபா.மீரா/எது அழகு – விருட்சம் நாளிதழ்

One Comment on “முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/பார்வையின் பொருளென்ன?”

Comments are closed.