அந்தோன்‌ சேகவும்‌/அவர்‌ கதைகளும்‌

கடைசியாகச்‌ சேகவ்‌ எழுதிய சிறுகதையின்‌ பெயர்‌ மணமகள்‌ (1903). இதில்‌ நாதியா என்றொரு நங்கையின்‌ கதையைக்‌ கூறுகிறார்‌ சேகவ்‌. கதையின்‌ ஆரம்பத்தில்‌ பொழுது புலருவதற்குச்‌ சிறிது நேரம்‌ முன்னதாய்‌ நாதியா விழித்தெழுந்து தோட்டத்தினுள்‌ உற்று நோக்குகிறாள்‌. “அடர்த்தியான வெண்ணிற மூடுபனி செந்நீல மலர்களை முக்காடிட்டு மூட விரும்புவது போல்‌ அவற்றை நோக்கிப்‌ படர்ந்து வந்தது.” கொள்கை குறிக்கோளற்ற தனது அசமந்த வாழ்க்கை மாறவோ முடிவுறவோ போவதில்லை யென நினைக்கிறாள்‌ அவள்‌, அப்போது அடர்த்தியான அதே வெண்ணிற மூடுபனி நாதியாவின்‌ ஆன்மாவை முக்‌ காடிட்டு மூடுவது போல்‌ தோன்றுகிறது நமக்கு. ஆனால்‌ பிற்பாடு பொழுது புலருகிறது. ““சன்னலுக்கு அடியிலும்‌ தோட்டத்திலும்‌ புள்ளினங்கள்‌ கூச்சலிட்டன, தோட்டத்‌ திலிருந்து மூடு பனி அகன்றுவிட்டது, வசந்த சூரியனது ஒளி யாவற்றைச்‌ சுற்றிலும்‌ பிரகாசித்தது, யாவும்‌ புன்‌ னகை புரிந்தன.” இயற்கைக்‌ காட்சியில்‌ ஏற்படும்‌ ஒரு மாற்றம்‌ மட்டுமல்ல இது, நாதியாவினது ஆன்மாவிலேயே ஏற்படும்‌ ஒரு பெரிய மாற்றமாகவும்‌ விளங்குகிறது குறிக்கோளற்ற அற்பத்தனமான ஒரு வாழ்க்கையுடன்‌ தனக்குள்ள பிணைப்புக்களை முற்றாகவும்‌ முடிவாகவும்‌ துண்‌ டித்துக்‌ கொள்வதென்று ஏற்கெனவே அவள்‌ தீர்மானத்‌ துக்கு வந்துவிடுகிறாள்‌.
சேகவின்‌ இந்தக்‌ கடைசிக்‌ கதையின்‌ தலைவியின து ஆன்‌ மாவில்‌ ஏற்படும்‌ இம்மாற்றம்‌ சேகவின்‌ இலக்கியப்‌ பணி அனைத்தையும்‌ ஓரளவுக்குத்‌ தீர்மானிப்பதாய்ச்‌ சொல்ல லாம்‌.
அந்தோன்‌ சேகவ்‌ சிறிய தென்திசை நகரான குகன்‌ ரோகில்‌ 1860ல்‌ பிறந்தார்‌. இருபதாவது வயதில்‌ மாஸ்‌கோ பல்கலைக்‌ கழகத்தில்‌ மருத்துவத்‌ துறையில்‌ சேர்ந்‌ தார்‌.’ அதேபோது நையாண்டி நகைச்சுவை ஏடுகளிலும்‌ செய்தியேடுகளிலும்‌, சிறுகதைகளும்‌ விகடத்‌ துணுக்கு களும்‌ ஓரங்க நாடகங்களும்‌ வசைச்‌ சித்திரங்களும்‌ எழுத ஆரம்பித்தார்‌.

1880ஆம்‌ ஆண்டுகள்‌ ருஷ்யாவில்‌ மெத்தக்‌ கடின மான காலமாகும்‌. பிற்போக்கு தலைவிரித்தாடிற்று, சுதந்‌ திர சிந்தன யின்‌ சிறு வெளிப்பாடுகளும்‌ இம்மியளவே யான அறிகுறிகளுங்கூட நசுக்கப்பட்டன. பிற்போக்கானது அடர்த்தியான வெண்ணிற மூடுபனி போல்‌ நாடு அனைத்‌ தையும்‌ முக்காடிட்டு மூடியிருந்தது. இளைஞராயிருந்த சேகவ்‌ இவ்வாண்டுகளில்‌ எழுதிய கதைகளில்‌ பணத்தை யும்‌ பட்டம்‌ பதவியையும்‌ நாடிய சிறு மதியினரைச்‌ சித்‌ தரித்தார்‌, நாட்டாண்மை புரியும்‌ ““தடித்தோரின்‌? படா டோபத்தையும்‌ குட்டை மனத்தையும்‌, ““மெலிந்தோரது” * அசட்டுப்‌ பணிவையும்‌ அடிமைப்‌ புத்தியையும்‌ எள்ளி நகையாடினார்‌. இவ்வுலகில்‌ ஒவ்வோர்‌ ஆளுக்கும்‌ அளிக்க வேண்டிய கெளரவம்‌ அவரது பணத்தையும்‌ அந்தஸ்தை யும்‌ கொண்டுதான்‌ நிர்ணயிக்கப்‌ படுகிறது.
தரும நிதிக்காகப்‌ பொழுதுபோக்கு மன்றத்தில்‌ மாறுவேட நடன விருந்து நடைபெறுகிறது. நடனமாடாத அறிவுத்துறை மேன்மக்கள்‌ சிலர்‌ படிப்பறையில்‌ செய்தி யேடுகள்‌ படித்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. அப்போது முக மூடி அணிந்த ஒருவர்‌ குடி மயக்கங்‌ கொண்ட நிலையில்‌ திடுமென நடனக்கூடத்திலிருந்து இரு இளம்‌ பெண்களை அழைத்துக்‌ கொண்டு படிப்பறைக்குள்‌ நுழைகிறார்‌. இந்த இளம்‌ பெண்களுடன்‌ தான்‌ தனியே இருக்க விரும்பு வதாய்‌ அறிவிக்கிறார்‌, படித்துக்‌ கொண்டிருப்போரை எழுந்து வெளியே போகச்‌ சொல்கிறார்‌. குடித்துவிட்டுப்‌ படிப்பறையில்‌ வந்து அட்டகாசம்‌ செய்ய வேண்டா மென்று அவரைக்‌ கடிந்து கொள்கிறார்கள்‌, செய்தியேடு படிப்போர்‌. முகமூடி அணிந்த ஆள்‌ ரகளை செய்கிறார்‌. வீணில்‌ தான்‌ நடன விருந்துக்குப்‌ பணம்‌ தரவில்லை, இந்த இளம்‌ பெண்களை “*இயற்கை நிலையில்‌” காண வேண்டும்‌ என்கிறார்‌. மன்றத்து அலுவலர்கள்‌ இந்த ஆளை வெளியே இழுத்துச்‌ செல்ல முயலும்‌ போது இவர்‌ தமது முக மூடியைக்‌ கழற்றி விட்டு முகத்தைக்‌ காட்டுகிறார்‌. இவர்‌ சாதாரண குடிகாரரல்ல, உள்ளூர்‌ தொழிலதிபர்‌, லட்‌ சாதிபதி என்பது தெரிகிறது; எல்லாரும்‌ மிரண்டு போ கின்றனர்‌. செய்தியேடு படிக்கும்‌ அறிவுத்துறையினர்‌ பேச்சுமூச்சின்றி எழுந்து படிப்பறையிலிருந்து நடையைக்‌ கட்டுகிறார்கள்‌ (முகமூடி, 1884).
சேகவ்‌ எதையும்‌ பலத்த குரலில்‌ பிரகடனம்‌ செய்‌ வதில்லை, வாசகருக்கு நேரடியாய்‌ அறிவுறுத்த முற்படு வதில்லை. ஆயினும்‌ அவரது கதைகளைப்‌ படிக்கும்‌ வாசகர்‌ தம்‌ காதுக்குள்‌ ஒரு குரல்‌ ஒலிக்கக்‌ கேட்கிறார்‌: ““மனி தனாய்‌ வாழ அச்சப்படுகிறீர்களே, ஏன்‌ இது? மேல்‌ நிலையில்‌ இருப்பவர்‌ என்றதும்‌ போற்றுகிறீர்கள்‌, கீழ்‌ நிலையில்‌ இருப்பவர்‌ என்றதும்‌ அப்படி அலட்சயப்படுத்துகிறீர்‌ களே, அழகா இது? மெய்யான இன்பம்‌ பணத்திலும்‌ பட்‌ டம்‌ பதவியிலும்‌ அடங்கியிருப்பதாகவா . நினைக்கிறீர்கள்‌? ஏன்தான்‌ பதவி ஏணியிலே உயர ஏறிக்‌ கொண்டே இருக்க வேண்டுமெனத்‌ துடிக்கிறீர்களோ?’ *

பச்சோந்தி (1884)-—இளைஞராய்‌ இருக்கையில்‌ சேகவ்‌ எழுதிய பிரபலமான கதைகளில்‌ ஒன்று இது. மேலிடம்‌ என்றதும்‌ பல்லைக்‌ காட்டும்‌ மனோபாவத்தை நயம்பட எடுத்துரைத்து நகைக்கிறது இந்தக்‌ கதை. சந்தை வழியே செல்லும்‌ போலீஸ்‌ அதிகாரி, அங்கு ஓர்‌ ஆளை நாய்‌ கடித்து விட்டதாய்க்‌ கேட்டதும்‌ நாயின்‌ உடைமையாளனை சும்மா விடக்‌ கூடாதென்று கத்துகிறார்‌. அந்த நாய்‌ ஜெனர லுடையதாய்‌ இருக்கலாம்‌ என்று யாரோ ஒருவர்‌ கூறிய தும்‌ போலீஸ்‌ அதிகாரி பச்சோந்தியைப்‌ போல்‌ உடனே நிறம்‌ மாறி, நாயால்‌ கடிபட்ட. அளைத்‌ திட்ட முற்படு கிறார்‌. அந்த ஆள்தான்‌ நாயிடம்‌ குறும்பு செய்திருப்பான்‌ என்று அவனைக்‌ கண்டிக்கிறார்‌. நாய்‌ ஜெனரலுடைய தாய்‌ இருக்காது என்று பேசப்பட்டதும்‌ திரும்பவும்‌ அதிகாரி யின்‌ நிலை மாறிவிடுகிறது. இம்மாதிரியான நாயின்‌ உடைமையாளனைத்‌ தண்டிக்காமல்‌ விடக்‌ கூடாது என்று கூச்சலிடுகிறார்‌…

இயோனிச்‌ (1898)-—இளம்‌ வயதில்‌ எஸ்‌. நகருக்கு வந்து வேலை ஏற்கும்‌ ஒரு டாக்டரின்‌ கதை இது.
இந்நகரில்‌ கல்வி கேள்வியில்‌ சிறந்தோராகவும்‌ கலைகளில்‌ தேர்ந்தோராகவும்‌ கூறப்படும்‌ தூர்க்கின்‌ குடும்பத்தா ருடன்‌ அவருக்குப்‌ பரிச்சயம்‌ ஏற்படுகிறது. இவர்களது வீட்டில்‌ வளரும்‌ நங்கை காத்யாவின்‌ மீது அவர்‌ காதல்‌ கொள்கிறார்‌. ஆனால்‌ காதலின்‌ உணர்ச்சித்‌ துடிப்பும்‌ ஊக்கமும்‌ மிக்க மணிக்‌ குரலுடன்‌ கூடவே டாக்டரது மனத்‌ துள்‌ வேறொரு குரலும்‌ ஒலித்துக்‌ கொண்டிருக்கிறது–நகர மத்தியதர வகுப்பாரது வாழ்க்கையின்‌ சிடுசிடுப்பான குரல்‌ அது. இந்த இரண்டாவது குரல்‌ நாளடைவில்‌ பலத்துப்‌ பெருத்து, முதலாவது குரலை மூழ்கடிக்கிறது. அற்பமும்‌ புன்மையும்‌ பகட்டும்‌ மடமையும்‌ நிறைந்த கொச்சையான சுற்றுப்புற வாழ்க்கையின்‌ வெள்ளம்‌ இந்த இளம்‌ டாக்‌ டரையும்‌ தன்னுள்‌ இழுத்துக்‌ கொண்டுவிடுகிறது. அவரது ஆன்மா ஒளியிழந்து மங்குகிறது, பணம்‌ பண்ணுவகைத்‌ தவிர வேறு எதிலும்‌ நாட்டமில்லாதவராகிறார்‌, ஊதிப்‌ பருத்துப்‌ போய்‌ சலிப்புற்றுச்‌ சிடுசிடுக்கிறார்‌. இயோனிச்‌ சின்‌ கதை மனித ஆன்மா சிறுகச்‌ சிறுக நலமிழந்து மரத்துப்‌ போவதைக்‌ காட்டுகிறது, அடர்த்தியான மூடு பனி ஆன்மாவின்‌ எழில்‌ மலரை முக்காடிட்டு மூடுவதைக்‌ காட்டுகிறது.

சேகவின்‌ கதைகள்‌ படிப்போரைக்‌ கலங்கச்‌ செய்‌ கிறவை, துயரம்‌ தோய்ந்த புன்னகை புரிகிறவை, மென்‌ மையானவை. அவரது கதைகளும்‌, கடற்‌ பறவை, வான்யா மாமா, மூன்று சகோதரிகள்‌; செர்ரித்‌ தோட்டம்‌ முதலான நாடகங்களும்‌ வாசகர்களையும்‌ பார்வையாளர்களையும்‌ அக்காலத்திய ருஷ்ய வாழ்க்கையின்‌ புன்மை குறித்தும்‌ கொச்சைத்தனம்‌ குறித்தும்‌ சிந்திக்க வைத்தன; மனித மாண்புக்குரிய வாழ்வை மலரச்‌ செய்ய வேண்டுமென்ற ஊக்கத்தை அவர்களுக்கு ஊட்டின.

சேகவ்‌ சித்திரித்த பழைய ருஷ்யா மறைந்து புதிய ருஷ்யா உதித்தெழுந்துவிட்டது. இந்த அருணோதயத்தைச்‌ சேகவ்‌ கண்டு களிக்க முடியவில்லை, 1904ல்‌ அவர்‌ இறந்து விட்டார்‌. சேகவின்‌ கதைகளிலும்‌ நாடகங்களிலும்‌ கூறப்‌ பட்டும்‌ ஆலை அதிபர்களும்‌ வர்த்தகர்களும்‌. இன்று ருஷ்ய நாட்டில்‌ இல்லை; “*கடித்தோர்‌’”, ““மெலிந்தோர்‌” என்ற பிரிவினை ஒழிந்து புதிய சமுதாயம்‌ இங்கு மலர்ந்து விட்‌டது. சேகவின்‌ கதைத்‌ தலைவர்கள்‌ பழைய வரலாற்றுக்கு உரியோராகிவிட்டனர்‌.

ஆயினும்‌, இன்றைய ருஷ்யாவின்‌ வாசகர்கள்‌ சேக வைத்‌ தம்‌ உயிரனையராய்‌ நேசிக்கிறார்கள்‌, லட்சக்‌ கணக்‌ கான பிரதிகளில்‌ இன்று அவரது புத்தகங்கள்‌ மீண்டும்‌ மீண்டும்‌ வெளியிடப்படுகின்‌ றன, வெளிவந்ததுமே விற்றுப்‌ போகின்றன. காரணம்‌ என்ன?

ருஷ்யாவிலும்‌ அனைத்து உலகிலும்‌ சேகவ்‌ போற்றப்‌ படுகிறார்‌, கோடானு கோடி வாசகர்கள்‌ அவரது புத்த கங்களை ஆவலுடன்‌ படிக்கிறார்கள்‌. காரணம்‌ என்னவெனில்‌ சேகவ்‌ யாவற்றுக்கும்‌ முதலாய்‌ உண்மையை எடுத்து ரைக்கிறார்‌, உள்ளதை உள்ளபடிக்‌ கூறி உள்ளத்தை ஒளி பெறச்‌ செய்கிறார்‌. சேகவின்‌ உண்மையானது மனச்‌ சான்றைக்‌ துயிலெழச்‌ செய்யும்‌ உண்மையாகும்‌: மனித வாழ்வு வளமும்‌ எழிலும்‌ பெற வேண்டும்‌, பெறவும்‌ போகிறது என்ற உணர்வையும்‌ ஊக்கத்தையும்‌ ஊட்டும்‌ உண்மையாகும்‌. மனிதனின்‌ நிலையை மனிதனுக்குத்‌ தெரியப்படுத்தும்‌ போது மனிதன்‌ மேம்படுவான்‌ ஏன்று சேகவ்‌ கூறி வந்தார்‌.

சேகவின்‌ வாழ்க்கையும்‌ சேகவின்‌ கதைத்‌ தலைவர்‌ களது வாழ்க்கையும்‌ இன்னல்‌ மிக்கதாகவே இருந்தன? ஆயினும்‌ அவர்‌ இந்த உடனடி நிலைமையை மட்டுமின்றி, ஓசையின்றி அடியெடுத்து வைத்து நெருங்கி வரும்‌” வருங்‌ காலத்தையும்‌ கணக்கில்‌ எடுத்துக்‌ கொண்டார்‌.

சேகவ்‌ மகத்தான எழுத்தாளராவார்‌, அதோடு அவர்‌ மகத்தான வாசகர்களை மனதிற்‌ கொண்டு எழுதியவருமா வார்‌. வாசகர்களின்‌ உயர்‌ பண்புகளில்‌, அவர்களது கூர்மதி யிலும்‌ நல்லுணர்விலும்‌ உள்ளன்பிலும்‌ முழு நம்பிக்கை கொண்ட எழுத்தாளர்‌ சேகவ்‌. வாசகர்களை அவர்‌ ஒன்றும்‌ தெரியாத சிறு பிள்ளைகளாகவோ, சிந்தனையற்ற வர்களாகவோ கருதி, ஒவ்வொன்றுக்கும்‌ தாமே தீர்வைத்‌ தயாரித்தளிக்க முயலவில்லை, அவர்களுக்கு உபதேசிக்க முற்படவில்லை. தாம்‌ எழுதுவதை வாசகர்கள்‌ கூர்ந்து தோக்குவர்‌, சிந்தனை செய்வர்‌, பிழையின்றிப்‌ புரிந்து கொள்வர்‌ என்று அவர்‌ திட நம்பிக்கை கொண்டிருந்தார்‌.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன