மாலா மாதவன்/காற்றோடு கைகுலுக்கு

இரண்டு ஆவிகள் பேசிக் கொண்டன.
“பார்த்துக் கொண்டே இரு! நான் நீங்குவதற்குள் என்னைக் கொண்டவள் இவனிடம் காதல் சொல்லி விடுவாள்!”
“சட்! அவளைத் தீண்டாத நீயே இப்படிப் பேசும் போது ஏற்கனவே அவனைத் தீண்டி விட்ட நான் அவன் உள் மனக் கிடக்கையை அறியாமலா இருப்பேன். உன் கணக்கு தவறு. அவனுக்கு இந்தக் காதலில் நம்பிக்கையில்லை.”
ஆவிகள் முன்னும் பின்னுமாய் சுழன்று நர்த்தனம்.ஆடியதில் அவற்றின் மணம் சுற்றுப்புறமெங்கும் மேலோங்கியது.
“நம் மணத்தால் இவர்கள் மணந்தால்?” இடப்புற ஆவி கேட்டது.
“மணக்கும்! காபியாய்!” வலப்புறம் பதில் சொன்னது.
“இல்லை டீயாய்! நான் டீ!”
“பார்! அவனுக்குக் காபி என்றால் இவளுக்கு டீ! இதிலேயே வேறுபாடு வந்து விட்டதே! இதிலென்ன காதல் வரப் போகிறது? காத்திருக்காதே! ஆறி விடும்!”
“ சூட்டோடு சூடாய்க் கிளம்பு என்கிறாய்! ம்ம்! சரி! டீயோ காப்பியோ.. நம்மைக் குடிக்கும் இவர்கள் சேர்கிறார்களோ இல்லையோ நாம் சேர்ந்து விட்டோம் காற்றுடன். வா! கைகுலுக்கலாம்!”
ஆவிகள் விடைபெற கோப்பைகள் மௌனம் காத்தன அவற்றைக் கைக்கொண்ட மனுஷி, மனிதனைப் போலே!

சாந்திசந்திரசேகரன் /இரவில் விழிக்கும் இன்பக்காதல்..! – விருட்சம் நாளிதழ்

One Comment on “மாலா மாதவன்/காற்றோடு கைகுலுக்கு”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன