சாந்திசந்திரசேகரன் /இரவில் விழிக்கும் இன்பக்காதல்..!

அந்த நவநாகரீகக் காபி கடையில் அவர்கள் இருவரைத் தவிர யாரும் இல்லை.
விளக்குகளின் வெளிச்சம் மட்டுப்பட்டாலும் நிலவொளியில் அவள் தேவதையாகத் தெரிந்தாள்.
பகலினும் இரவில் மோகினியாய் மயக்கும் மங்கையின் மர்மம் அறியாத அவன் கண்கள் அவளை விட்டு விலகவில்லை.
இதை அறிந்த அவள் இதழ்கள் ஒரு மந்தகாசப் புன்னகையைச் சிந்தியது .
நீராவி ரயிலென புகை சிந்திய காபி குவளைகள்.. கவனிப்பாரற்று காத்திருந்தன.
ஐன்ஸ்டீன் சொன்னது போல.. பிடித்த அவளுடன் இருக்கையில்.. இரவு கடந்து பகல் வந்தது.. நொடி போல் இருந்தது.
மக்கள் கூட்டம் மெதுவாய் சேர.. சுவற்றில் ஓவியமாய் சிரித்திருந்தனர் காவியக் காதல் ஜோடிகள்.
‘மீண்டும் இரவு புலர.. நம் காதல் தொடரும்’ என்று அவர்கள் காத்திருப்பதை.. நீங்கள் கவனித்தீர்களா?

சசிகலா விஸ்வநாதன்/கனிந்த காதல் – விருட்சம் நாளிதழ்

One Comment on “சாந்திசந்திரசேகரன் /இரவில் விழிக்கும் இன்பக்காதல்..!”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன