
என் நண்பர்
மதுவந்தி காலமான செய்தி
சாந்தி ரஸவாதி மூலம்
கேள்விப்பட்டபோது அதிர்ந்து போனேன்!
அறுபது வயதுக்குப் பிறகும் சுறுசுறுப்பான இளைஞர்
நேற்றைய சூம் கூட்டத்திலும் அவரைப் பார்த்தேன்
நான் நடத்தும் கூட்டங்களுக்கெல்லாம் அவரை அழைப்பேன்
சிரித்த முகத்துடனும் ஒளி வீசும் கண்களுடன்
அவரைப் பார்க்கும்போது
உற்சாகம் தலை தெறிக்க ஓடும்
நண்பா, பிரிய வேண்டிய வயதா இது
நேற்றுதான் நீ கலந்துகொண்ட கடைசிக் கூட்டமா?
எப்போதும் சிரித்த முகத்துடன் இன்னொரு நண்பனை
எங்கே பார்ப்பேன்..
