
குழந்தை சிரிப்பு
குதுகலமான பேச்சு
குறை சொல்லா மனசு
எல்லோரும் ஒன்றே அவனுக்கு
அவன் விரும்புவதும் நன்றே
எல்லா நிகழ்வுகளிலும்
அவன் உண்டு
அவனுக்கு நிகர் யார் உண்டு?
என் கவிதைகளின்
முதல் ரசிகன்
என் உடன் பிறவா சகோதரன்
பாராட்டுவதில்
அவன் இந்திரன்
படைப்பதில் அவன்
பிரம்மதேவன்
அவன் கவிதைகளில்
எப்பொழுதும் ஒலிக்கும்
ஒரு “பூபாளம்”
மீண்டும் படித்தால் “சொல் புதிதாய் ” கேட்கும்
அதில் பல அர்த்தங்கள் “குவியும் “
அது ஒரு “கலை புதிது’
எல்லோரையும் எழுதச் சொல்லி
நீ மட்டும் நிறுத்திக் கொண்டாயே
இது நியாயமா?
கடவுளர்க்கு
கவிதை சொல்ல
காலம் வந்ததோ?
அதனால் காலன் வந்தானோ?
இன்னும் கேட்க நிறையவே இருக்கிறது
ஆனால பதில் சொல்ல நீ இல்லையே?
நீ இல்லையே
நீ இல்லையே

One Comment on “அதிரன்/மதுவந்தி”
Comments are closed.