எல்.ரகோத்தமன்/ஏமாறும் பட்டாம் பூச்சிகள்

வெய்யிலோ மழையோ
ஆளுக்கொரு குடை!

நிழல் அவசியம்!

நிழல்பயணம் தொடர
குடை மிகவும் அவசியம்!

குடையில்லையெனில்
நிழலில்லை
நிழலில்லையெனில்
நடக்கவோர் சாலையில்லை
சாலையற்ற சாலையில்
நீள்வது முட் பாதை!

முட்களில் கால் படாமல்
முட் கீறல் இல்லாமல்
வீடு போய் சேர
மனதின் நுனியில்
ஏதோ ஒரு தவிப்பு!

முட்களில் வந்தமர்ந்து
ஏமாறுகின்றன படபடக்கும் வண்ணத்துப்
பூச்சிகள்!

அடுத்த நொடி
வண்ணப் பூக்கள் நாடி
படபடத்து எழுகின்றன
வானில்!

தன் சிற்றிறகை
திக்கெங்கும் வீசி
வானம் காட்டும் வழியில்
மலர்வனச் சோலைத் தேடி
வேட்கையுடன் தொடர்கிறது
பயணம்!

அக் கண்கவர் ஜீவனுக்கு
வெயிலோ மழையோ
குடைகள் தேவையில்லை!

19-04-2026

அதிரன்/மதுவந்தி – விருட்சம் நாளிதழ்