சாந்திசந்திரசேகரன்/அவள்..!

அந்த பூர்வீகத்து தாத்தா வீட்டினை விற்பதற்காக, இளைய கண்ணன் ஊருக்கு வந்தான்.
விற்கும் முன் அந்த வீட்டில் இருந்த சில பழுதுகளை சரிசெய்ய பொறியாளர் ஒருவரையும் வரச்சொல்லி இருந்தான்.
பொறியாளர் வர தாமதமாகவே, வீட்டைச் சுற்றிப் பார்க்க..
அவனது பால்யம் மொத்தமும் கண்ணனின் கண்முன் காட்சிகளாய் விரிந்தன.
ஒவ்வொரு அறையாக கடக்க, தாத்தா எப்போதும் வெறித்துப் பார்க்கும் அந்த ஓவியத்தின் முன் அவன் கால்கள் நின்றன.
கரும்புச் சாயலில் வரையப்பட்ட முகம்,
அது ஒரு கிராமத்தின் மறந்துபோன குரலைப் பேசிக் கொண்டிருந்தது.
மஞ்சள் பூ ஒன்று அவள் காதில் மலர்ந்தது போல,
தாத்தாவின் இறுதிக்காலம் வரை அவர் நினைவுகளில் நின்ற வசந்தத்தைக் காட்டியது.
ஏன் உதடுகளுக்கு நீல நிறம் அளித்தார் என்று சிந்தித்த போது.. அப்படம் மறைக்கும் ரகசியங்களில் அதுவும் ஒன்றென நினைத்துக் கொண்டான்.
அவள் கண்கள் மட்டும், எல்லாவற்றையும் பார்த்ததுபோல் அமைதியாக இருந்தது.
காலம் கடந்தும், அந்த ஓவியம் மட்டும் மாறாமல், அது இன்னும் தாத்தாவின் உயிரைத் தாங்கி நிற்பதாய்த் தோன்றியது.
வாசலில் மகிழுந்து வந்த சத்தம் கேட்டு, நினைவுக்கு மீண்டவன், வாசலுக்கு விரய.. மீண்டும் சிலையானான்.
சுவரில் ஓவியமாய் நின்ற மங்கை மறுபிறவி எடுத்த ஜாடையுடன், நவீன யுவதியாய் அவ்வீட்டினை சீரமைக்கும் பொறியாளராய் வாசலில் நின்றிருந்தாள்.
அந்த ஊதா நிறத்து உதட்டுச்சாயம் அவளது மயக்கும் சிரிப்பிற்கு அத்தனை பொருத்தமாய் இருந்தது..!!

#

One Comment on “சாந்திசந்திரசேகரன்/அவள்..!”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன