
சூரியவொளி.. அந்தப் பிரபல இசைக்கலைஞனின் தற்போதைய நேரத்தைப் போல.. அஷ்டமித்துக் கொண்டிருந்தது.
ஒரு காலத்தில் ஓராயிரம் கரங்கள்.. அவனின் ஒரு கையெழுத்துக்காக காத்திருந்த காலம் மாறி.. இன்று.. அவன் யாரென்று தெரியாத ஒரு நகரில்.. ஒரு பழைய மரப்பெட்டியின் மேல் தனியே அமர்ந்திருந்தான் .
அவன் அணிந்திருந்த தொப்பி.. காற்றின் இசைக்கு நடனமாடிக் கொண்டிருந்தது.
கையில் இருந்த கிதாரை மெதுவாக இசைத்தான்; ஒவ்வொரு ஸ்ருதியும் அவன் மனதைப் பேசின. மென்சோகம் இலையோடியாது.
ஒருகாலத்தில் மேடைகளில் இசைத்தவன், இன்று தெருக்களில் தன் கதைகளை வாசிக்கிறான்.
அவனது பாடலைக் கேட்க பெரிதாக யாரும் நிற்கவில்லை; ஆனாலும் அவன் வாசிப்பதை நிறுத்தவில்லை.
சிறுமி ஒருத்தி அவன் முன் வந்து நின்று அவனைக் கவனித்தாள். புன்னகைத்தாள்; கால்கள் அவன் இசைத்த ராகத்திற்கு ஏற்றார் போல தாலமிட்டன.
அவள் அன்னை.. அந்தக்குழந்தையின் கரம் பற்றி இழுத்த பின்னும் அவள் நகரவில்லை.
அவளின் கண்களில் ஒரு ஆச்சரியம், ஒரு மகிழ்ச்சி.
“இந்த இசை யாருக்காக ?” என்று அவள் கேட்டாள்.
அவன் சிரித்தான், “நான் என்னை மறக்காமல் இருக்க…எனக்காக வாசிக்கிறேன் ” என்றான்.
“நல்லா இருக்கு அங்கிள்..!” என்று அவன் கன்னத்தில் தன் ரோஜா இதழ்களைப் பதித்துவிட்டுச் சென்றாள்.
அந்த நிமிடம்
அவனது இசை, அவனது கடந்த காலத்தின் நிழலிலிருந்து,
விடுபட்டு புத்துயிர் பெற்றது .
அவன் மீண்டும் வாசிக்கத் தொடங்கினான். இப்போது.. அந்த வாசிப்பில்.. கேட்போரை அரவணைத்து.. இதழ்களில் புன்னகை சூட்டும் ஒரு கதகதப்பு இருந்தது.

One Comment on “சாந்தி சந்திரசேகரன்/இசைக்கலைஞன்..!”