மரு.ச.கந்தசாமி /முன் தினம் பார்த்தேனே

இளைய நிலா, பொழிகிறது “என்ற இளையராஜா பாடலை மோகன் பாட,அவன் விரல் கிட்டாரில் நடனமாடியது. மனமோ காற்றில் பறந்தது .எத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டன. கல்லூரி நாட்களில் மோகனும் கிடாரும் இணை பிரியா நண்பர்கள்.கல்லூரிக்கு தினமும் கிளாசுக்கு வருகிறானோ இல்லையோ, தினமும் கல்லூரி கேண்டீனில் மோகன் கிட்டார் சகிதம் இசை முழங்க ,சுற்றி வாலிப கூட்டம் அலைமோதும். பள்ளி நாட்களில் ஏறாத படிப்பு கல்லூரியிலும் தொடரவில்லை .
ஆனால் பிறப்பிலேயே கூட ஒட்டிப் பிறந்த மோகனின் இசை மோகம் ,எதிர்காலத்தில் பெரிய ராக் ஸ்டார் ஆக வேண்டும் என்று பல கனவு.கனவு பலிக்கும் முன்னே மோகன் காதலில் விழ ,பிரியா மோகனுக்கும் கிட்டாருக்கும் இடையே புகுந்தாள். மோகன் கிடார் இசைக்க, பிரியா பாட ,கல்லூரி கல்ச்சுரல்ஸ் கரகோஷத்துடன் விண்ணை பிளக்கும் . இசையே உயிர் என்றாலும், பிரியாவின் காதலில் வசப்பட, மோகன் தன் எதிர்கால கனவை கோட்டை விடலானான் .ஆனால் பிரியாவவோ காலங்களில் அவள் வசந்தம் என சுற்றிவிட்டு, கல்லூரி படிப்பு முடிந்ததும் காதலை காற்றோடு
கறைத்து காணாமல் போனாள். காதலால் தன் ஸ்வரங்கள் தடுமாற, மோகனும் இன்றும் தன் கிட்டாரும் கையுமாக ,தாடியும் சோகமும் தழுவ கிட்டாரில் மூழ்கிப் போனான் .அவன் கிட்டார் மட்டும் இன்னும் மறவாமல், “முன்தினம் பார்த்தேனே, பார்த்ததும் தோற்றேனே ” என காதலை இசைத்துக் கொண்டிருக்கிறது.

சாந்தி சந்திரசேகரன்/இசைக்கலைஞன்..! – விருட்சம் நாளிதழ்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன