
நாளைய பணிகள்
மனதை அழுத்த
கண் விழித்தான்
நடு இரவில்
அடுத்த உறக்கம் வரும் வரை
இருட்டுக்குள்
இரவை
உற்றுக் கேட்கிறான்
மிகச் சன்னமாகக் கேட்கிறது
மனைவியின் குறட்டை
எதையோ முணுமுனுத்தபடி
புரண்டு படுக்கிறான்
மகன்
மடித்து வைத்திருந்த
செய்திதாள்களின்
மேல் நடந்து செல்லும்
கரப்பான் பூச்சிகள்
புழைக்கடையில்
வளை பறிக்கும்
எலிகள்
இரையை கண்ட
மகிழ்ச்சியில் அலறும்
ஆந்தைகள்
தனிமை தாங்காமல்
ஊழையிடும்
தெரு நாய்கள்
எதிர் வீட்டு
தாத்தாவின் புலம்பல்கள்
கடைசி ரயிலின்
கூவல்
வீசில் ஊதி
தரையை தட்டிச் செல்லும்
கூர்க்கா
அதற்குப் பின்
ஒரு சைக்கிள் சத்தம்
முடியவேவில்லை
நொடி முள்ளின்
தொடர் ஒலி
இரவு என்பது
வேறு உலகம் தான்
