
“அவகிட்ட முதல்ல சம்மதம் கேட்டீங்களா?”
“என்ன பாரு இப்ப இப்படி கேட்கற? எல்லாம் ஒன்னுக்கு நூறு தடவை கேட்டேனே”
“இல்லைங்க, உங்க மக என்னைப் போல் போல்டு கிடையாது, உங்களை மாதிரி மனசுக்குள்ளேயே வச்சு உசுர வாங்குவா”
“இல்லல்ல, மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சுதான் சம்மதம் சொன்னா”
“அப்புறம் ஏன் அங்க தனியா உட்காந்து அழறாளாம்?”
“நீ சொல்லிதான் நானே கவனிச்சேன், அப்படி இப்படி லவ்வு கிவ்வு இருக்குமோ?”
“இருந்தா சொல்லித்தொலைக்கலாம்ல? நாளைக்கு கல்யாணம் வச்சுகிட்டு இப்படியா அழுவா?”
“அப்போ இருக்குமா? கேட்கவா?”
“லவ் பண்ற அளவு அவ்ளோ சூட்டிகையும் கிடையாதே அவ”
“எப்படி சொல்ற பாரு”
“உங்க ஜீன், சரியான தத்தி”
“ஏய், அப்படியே என்னை வாரிவிடறியே”
“உண்மையைத் தானே சொன்னேன், வழவழன்னு பேசாம அவளைப் போய்ப் பார்த்துப் பேசுங்க”
மகள் வித்யாவை நோக்கி நடந்தார் சோமசுந்தரம்.
மகள் வித்யா தூரத்தில் தம்பி விஷால் தன்னை விட்டுவிட்டு சாக்லேட் சாப்பிடுவதையும் தன்னால் எதும் கேட்ககூட முடியாமல் இருப்பதையும் நினைத்தாள்.
ஆறாய் வழிந்தது கண்ணீர்.

One Comment on “சாக்லேட் பேபி/அப்புசிவா”