விஜயலக்ஷ்மி கண்ணன்/கண்ணீர் துளிகள்

நீலாவின் கண்கள் எதையோ தேடியது. யாரையோ எதிர்பார்த்தது போல் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தாள்.
இன்னும் சிறிது நேரத்தில் அவள் செய்யாத குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட போகிறாள்.
கண்ணீர் துளிகள் கன்னத்தைத் தொட்டு தரையில் சிந்தியது.
புதிதாய் நியமனமான சேல்ஸ் மேனேஜர் அன்று மாலை அவளிடம் தகாத முறையில் அணுகியபோது அவள் மேஜை மேலிருந்த பூஜாடியை கையில் எடுத்துத் தலையில் வீசுவதற்குள் அது நடந்து போயிற்று.
திடீர் எனக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த சீனா அந்தப் பூஜாடியைப் பிடுங்கி ராஜன் தலையில் அடித்து அவன் உடல் தரையில் சாய்ந்தது.
அவளை அவள் காப்பாற்றிக் கொள்ள நினைக்கவில்லை.இத்தனை சோகத்திலும் வைராக்கியமுடன் விழாமல் நின்றாள் நீலா.
அதோ சீனா அவசர அவசரமாக வந்து கொண்டிருப்பது தெரிகிறது. போலீசார் ஜீப்பில் ஏறிக் கொண்டாள்.

One Comment on “விஜயலக்ஷ்மி கண்ணன்/கண்ணீர் துளிகள்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன