விஜயா சுப்ரமணியம்/தேங்கி நின்ற கண்ணீர்

மாலினி வேகமாகப் படிகளில் வந்து கொண்டு இருந்தாள். இன்று. அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள். வேகமாக வந்த அவள் ஒரு இளைஞனை இடித்து விட்டுச் செல்கிறாள். பெண் பார்க்க வருபவர் நினைப்பு மனதில் ஜில்லென்று இருக்கிறது
இந்த நினைப்பில். தள்ளி விட்ட இளைஞன் என்ன ஆனான் என்று பார்க்கவில்லை. அந்த இளைஞன் படியில் உருண்டு போய் அடிபட்டுக் கிடந்தான்.
அவளோ எதையும் கவனிக்காமல் வீட்டுக்குப் போய் விட்டாள்.
ஏழு மணி ஆகியும் மாப்பிள்ளை. வரவில்லை. அப்புறம் செய்தி வருகிறது. அவன் வரும் வழியில் ஒரு பெண்ணால் தள்ளப்பட்டு அடிபட்டுக் கிடக்கிறார் இவளைப் பார்க்க வர இருந்த. மாப்பிள்ளை.
செய்தி கேட்டதும் தன்னால் தான் ஒருவருக்கு அடிபட்டது என்று. தேடி. ஓடினாள் ஆஸ்பிடலுக்கு
அங்குக் கால்களில் அடிபட்டுத் தலையில் கட்டுடன் அவரைப் பார்த்துக் கைகளை. பிடித்துக் கதறி அழுதாள்.
அப்பொழுது தீர்மானம் எடுத்தாள் தன்னை. பெண் பார்க்க வந்து தன்னால் அடிபட்டடு. கிடக்கும் அவரையே மணப்பது.
அன்று கண்ணில் தேங்கிய கண்ணீர் இன்றும் அப்படி யே நிற்கிறது

18-5 -26

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன