
அழகான அந்த முகத்தில் வாழ்க்கையின் சோகம் பிரதிபலிக்கிறது. சாட்சியாகக் கண்ணீர் துளிகள்.
“சபாஷ். உங்களைச் செலக்ட் பண்ணிட்டேன். எப்படி இந்த உணர்ச்சிகளைத் தத்ரூபமாகக் காட்ட முடிந்தது? ஒளி மயமான எதிர்காலம் காத்திருக்கிறது. “
சீரியல் இயக்குநர் மகிழ்ச்சியுடன் சொன்னார்.
“நன்றி சார் “
மதுமிதாவின் பணிவான பதில்.
அவளுக்குத்தான் தெரியும். பிறந்த வீட்டின் கஷ்டங்கள், புகுந்த வீட்டின் கொடுமைகள் அவளை அறியாமல் வெளிப்பட்டது. இயக்குனர் கேட்ட சோக நடிப்பு.
