செல்வமணியும் சுமதியும்வழக்கம்போல் ராஜாஜி பூங்காவில் சந்தித்தார்கள். லேடீஸ் பஸ்ட் என்பதுபோல் சுமதிதான் பேச ஆரம்பித்தாள். ‘செல்வா உனக்கு இந்த கோட்டும் டையும் ரெம்ப நல்லா இருக்குடா’’ என்றாள்.
‘இந்த ஐஸ் வைக்கிற வேலையெல்லாம் வேண்டாம். என்ன அவசரமாக இங்க எதுக்க வரச் சொன்ன?’ சற்று கோபமாக செல்வமணி கேட்டான்.
‘செல்வா நீ கோபமாக கேட்பது கூட எனக்கு ரெம்ப அழகாக இருக்குடா.' என்றாள் சுமதி.
‘’ சுமதி நாம ஆறு மாதமாக லவ் பண்ணிட்டு இருக்கோம். நீ எனக்கு நம்பிக்கை தர மாதிரி எதுவும் சொல்ல மாட்டேங்கறே. உன்கிட்ட கோபப்படாமல் கொஞ்சவா எனக்குத் தோணும். சரி நீ எதுக்கு அவசரமா வரச் சொன்ன..? ‘’என்று சற்று அமைதியாகக் கேட்டான் செல்வமணி.
சுமதி தயக்கத்துடன் ‘’ செல்வா நம்ம லவ் பத்தி அப்பாகிட்ட சொன்னேன். அவர் ஓகே சொல்லிட்டார். ஆனா.’’ என்றாள்
‘’ என்ன ஆனான்னு இழுக்கறே. சொல்லு எதானாலும் சொல்லு. நம்ம காதலுக்கு உன்னோட அப்பா ஓகே சொல்லிட்டேர்லே அது போதும்’’ என்று சிரித்துக்கொண்டே கூறினான் செல்வமணி.
‘’ செல்வா என்னை மாரேஜ் பண்ணிக்கணும்னா நீ எங்க வீட்டோடு மாப்பிள்ளையா இருக்கணும்னு என்னோட அப்பாவும் அம்மாவும் ஸ்டிரக்கா சொல்லிட்டாங்க. நான் அவங்களுக்கு ஒரே பொண்ணு. வயதான காலத்திலே அவங்களை கவனிக்க என்னைத் தவிர வேறு ஒருத்தரும் இல்லே. நான் சொல்றதை நீ நல்லா புரிஞ்சிருப்பேன்னு நினைக்கிறேன். நீ என்ன சொல்றே செல்வமணி.’’ என்றாள்.
‘’ சுமதி நானும் என்னோட அப்பாவுக்கு ஒரே சன். நானும் அவங்க எதிர் காலத்தைப் பற்றி யோசிக்கணும். நான் உங்க வீட்டோடு மாப்பிள்ளையாக வந்துட்டால் என்னோட அப்பா அம்மா நிலை.’’ என்றான் செல்வமணி.
‘’ சரி செல்வா நம்ம மாரேஜ் பற்றி யோசித்து நல்ல முடிவு எடுப்போம். இப்போதைக்கு பிரிவோம் மீண்டும் நல்ல முடிவோடு சந்திப்போம்’’ என்று சுமதி கண்ணில் நீர் பெருக செல்வமணியை ஏறிட்டுப் பார்த்தாள்.