விஜயலக்ஷ்மி கண்ணன் /”மூச்சு விடும் நேரம்.”

அனுராதா ஜெய சங்கர் அவர்கள் எழுதியுள்ள ஒரு சிறப்பான, எந்த வித ஒப்பனையும் செய்யப்படாத ,இன்றைய காலத்தில்,
சாதாரண அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவத்தைச் சுற்றி எழுதப்பட்ட சிறு கதை.
இது அவருடைய புது புனல் எனும் சிறுகதை தொகுப்பிலிருந்து எடுத்துக் கொண்டது.
“மூச்சு விடும் நேரம்.”.ஆமாம், இது தான் கதையின் பெயர்.
ஒரு குடும்பக் கதை.
நிவேதிதா பிறந்த வீட்டுக்கு வருகிறாள். அவள் வந்ததில் பெற்றோருக்கு மட்டிலா மகிழ்சசி என்றாலும், மாப்பிள்ளை, குழந்தைகள் இல்லாமல் வந்திருப்பதால் சற்று கவலையோடு திடீரென வந்த.காரணத்தைக் கேட்கிறார்கள் அம்மாவும் அப்பாவும்.
“எல்லாரூம் நல்லா இருக்காங்க அப்பா”என்று நிவேதிதா சொன்னபிறகு சற்று சமாதானம் ஆனார்கள்.
ஒரு தாயின் மனதை படம் பிடித்துக் காட்டும் ஆசிரியர், அம்மாவின் வாயிலாக “கொஞ்சம் கருத்து இலைச்சு போயிட்டே நிவி!”என்று சொல்ல வைக்கிறார்.அம்மாவுக்கு என்றைக்கும் எத்தனை வயதானாலும்
குழந்தை தான். நம் அம்மாகளை நினைக்க வைத்திடும்.

அன்று இரவு பெற்றோர்களுடன் தங்க போவதாக நிவி சொன்னவுடன் ஒரே குஷி.உள்ளுக்குள் ஒரு சிறு நெருடல். அவளுக்கு ஏதும் பிரச்சனை இல்லையே என்ற சந்தேகம்.
எப்படி பசங்களை விட்டு இருக்க போறே என்றால் அம்மா.
இருபது வயசும், பதினேழு வயசும் கைக் குழந்தைகளா என்ன? எல்லாம் இருந்துக வேண்டியது :”
நிவி இன்னும் ஒரு குழந்தை தான்.
முருங்கை கீரை அடை இரவு உணவு முடிந்து
அப்பாவுடன் தக்காளி வாங்க ஒரு நடை.

செருப்பு stand பின்னால் படர்ந்து இருந்த தூசியும் ஒட்டடை யம் அப்பா அம்மாவுக்கு வயதாகி வருகிறது என்று உணர்ந்து மறுநாள் சுத்தம் செய்திட வேண்டும் என்று நினைத்தவண்ணம் படியிறங்கினாள் நிவி.
பெண்களுக்கே உரிய குணம்.
இரவு சாப்பிடும்போது அப்பா கேட்டார்..
போன வாரம் திடீர்னு உன்னோடு புஸ்தகங்கள், அதோடு பழைய வாணலி, தோசை திருப்பி எல்லாம் 2 பெட்டி எதுக்கு அனுப்பிவேச்சே?
நிவி சொன்னா.அவளுடைய பெண்ணும் பிள்ளையும் இந்தத் தலைமுறை பசங்க.
வீடு interior மாத்தணும் என்று ஒரே கூத்து.
இது எல்லாம் அருமை தெரியாம தூக்கி போட்டாலும் போடுங்க.பழைய சாமான்.அதுக்களுக்கு பிடிக்காது.
அம்மா என்னால முடியலே.மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.குரல் உடைந்து அழத் தொடங்கினாள் நிவி
பேச்சை மாற்றி மொட்ட மாடிக்குப் போய் முழு நிலவில் அமர்ந்தார்கள்.
அம்மாவின் மூட்டு வலி நினைவில் நிவி நாற்காலிகளை மேலே கொண்டு போட்டா.
பிள்ளை Plus 2. good marks medical seat கிடைக்கணும்.கிடைக்கிலே, அவன் என்ன பண்ணுவானோ, பயமா இருக்கு.
oru நாளைக்கு எத்தனை தடவை Sahasranamam சொல்றேன் தெரியுமா?பெருமாளுக்கு காதிலே ரத்தமே வந்திருக்கும். ரொம்ப டென்ஷனா இருக்குப்பா.

பெண் படுத்தும்.பாடு
hair cut, coloring.மாமனார் எடுத்துக் கேட்டால் மூணு மணி நேரம் கத்தி தள்ளரா .
கணவர் தொலைபேசியில் அழைத்து அவளை விசாரித்துக் கொண்டார். அப்பா அம்மாவிடம் புலம்பினாயா என்றார்.
இல்லை இல்லை.
அவா மனச நோகடிக்க விரும்பலை.
புலம்பத் தான் நீங்க இருக்கீங்களே.

ரொம்ப எளிமையான சாதாரண குடும்ப கதாபாத்திரங்கள்.அருமையான நடைமுறை தமிழில் சிறிதும் அலட்டிக்காமல் சொல்ல வந்ததை அழகாகச் சொல்லிவிட்டு நம் மனதில் இடம் பிடிக்கிறார் எழுத்தாளர் அனுராதா ஜெய சங்கர்.
எல்லா கஷ்டம் களையும் ஊதி தள்ளிவிடலாம் நல்ல அன்பான, புரிந்துகொள்ளும் கணவர் தன் பக்கத்துணையாக இருந்தால்.
அன்றிலிருந்து இன்றுவரை எத்தனை action கதைகள், திரில்லர் கதை கள் படித்தாலும், குடும்ப கதைக்குத் தனி மவுசு தான்.இதை அறிந்து கதையை நடத்தி இருக்கிறார் அனுராதா அவர்கள்
இருட்டில், நிலாவின் ஒளி மட்டுமே இருக்க, அம்மா திடீரென்று சுவிட்ச் தட்டினாள்.
விளக்கு பளிச்சென்றது.
Very positive approach to life. lights on பண்ணி காட்டிய gesture.

22.05.2026 அன்று
நான் விமர்சித்த கதை

One Comment on “விஜயலக்ஷ்மி கண்ணன் /”மூச்சு விடும் நேரம்.””

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன