
ஊருக்கு ஒதுக்குப்புறமான
கல்யாண மண்டபத்தில்
இருந்து காரில் வீடு
திரும்பிக் கொண்டிருந்தேன்
குண்டும் குழியும் ஆன சாலை
இரு மருங்கிலும் ஏராளமான
மாடுகள் கண்கள் கார் விளக்கு
பட்டு பச்சை தீ கங்குகளாய் ஒளிர
இருட்டில் இருட்டாக
தூரல் மேல் பட்டு தெறிக்க
எதற்கும் அசையாமல்
கண்ணுக்கு எட்டிய வரை வைக்கோல் , கன்று எதுவுமே இல்லை
ஒரு புரம் நீண்ட நெடிய மதில்
சுவர்
இவை கறவை மாடுகள் அல்லவே?
ஊருக்கு வெளியே கூட்டமாய் ஏன்?
மனம் ஒருகணம் அதிர்ந்தது
அதில் கல்யாண வீட்டு கலகலப்பு
அகன்று பாறாங்கல் ஒன்று
மயான அமைதியுடன்
வந்தமர்ந்து கொண்டது
