இந்திரா ராமநாதன்/அதிகாலை அவசரம் !

என்ன சத்தம் இந்த நேரம்
ஆவியோடு தூக்கி நின்று
“உஷ் “ என்றது குக்கர் !
விசில் சத்தம் மனம் எண்ண,
“கா கா “என்று சன்னலில் சத்தம் !
“அக்கக்கோ “ சத்தம் !

“ம்ம்ம்ம்” ரீங்காரமாய் மோட்டார் சத்தம் ,
“பூ “பை” மாட்டிட்டேன் சத்தம் !
“காபி”யைப்பையன் உறிஞ்சும் சத்தம் !
“சரக் சரக் “என்று newspaper புரட்டும் சத்தம்!
“ஒத்தை சாக்சைக் காணும்மா” மகள் சத்தம்
“தைராய்டு மாத்திரை” கொடும்மா – மாமியார் சத்தம்!
பாத்திரங்களை உருட்டும்
வேலைக்காரி சத்தம்!
“ம்ம்மா “தண்ணிக்காரன்
சத்தம் !
குருமா கொதிக்கும் சத்தம்!

அவள் வேண்டும் சத்தம்
எப்போ கேட்கும் !
காதுகள் 👂 அதையே தேடுது!

இன்பத் தேன் பாயுது காதிலே ! அம்மாடி !

“இடியாப்பம் – இடியாப்பம் “

பாய்ந்து திறந்தாள் வாசல் கதவை !
“அட” இப்போ “மைக்” வைத்து விட்டானே !
“மைக் “சத்த மகராசன் வாழ்க !
“சத்தம் “கிச்சன் வரை !

One Comment on “இந்திரா ராமநாதன்/அதிகாலை அவசரம் !”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன