மரு.ச.கந்தசாமி/கன்னத்தில் குழி அழகு

காலையில் அலாரம் அடிக்கும் முன்னே எழுந்து பார்வதி” அம்மா காபி ரெடியா ?என்று கேட்டுக் கிச்சனுக்குள் ஓடினாள். அவள் அம்மா அம்புஜம் ” ஆமாண்டி எழுந்ததும் பல்லலம்பிண்டு காபி
குடிடா “என்றாள். பார்வதி பேங்கில் மேனேஜர் வேலை. காபி குடித்தபடியே
பார்வதி” அம்மா இன்றைக்கு என்ன சமையல்? என்று கேட்க, அம்மா” ஏடி நீ கேட்ட கீரை சாதம் பருப்பு குழம்பு” எனக் கூறினாள். சிறுவயதிலேயே அப்பாவை இழந்த பார்வதி தாய் அம்புஜம், வீட்டில் அப்பளம் போட்டுச் சம்பாதித்து பார்வதியை படிக்க வைத்தாள். பார்வதி படிப்பிலும் அழகிலும் சூட்டி. அதிலும் அவள் கன்னத்தில் விழும் குழி கொள்ளை அழகு .அம்புஜம் தந்தை இல்லாத குறையை நீக்க ,பார்வதிக்கு வரம் தேடினாள். பார்வதியோ” அம்மா எனக்கேற்ற ராஜகுமாரன் என் கனவில் முகம் பார்த்துட்டேன்”எனச் சொல்லித் தட்டிக் கழித்தாள். மகள் மனம் அறியாது அம்புஜமும் இவள் யாரை காதலிக்கிறாளோ எனக் கவலையோடு தினம் தூங்காமல் தவித்தாள். பார்வதியோ அம்மா தயவில் வேலையில் மூழ்கி, கனாக்காதலில் ராணியாக முகம் வாடமல் வலம் வந்தாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன