
“உங்க வெற்றியின் ரகசியத்தைச் சொல்லுங்க”
பிரபல நடிகையைப் பார்த்துப் பத்திரிக்கையாளர் கேட்டார்.
தன் வீட்டு சுவற்றில் மாட்டியிருந்த அந்த இரண்டு முகமூடிகளை கையில் எடுத்துக்கொண்ட அவள் சொன்னாள்..
“நான் எப்பவும் அணிஞ்சுக்கிற இந்த ரெண்டும் தான்”
“இவைகளை நீங்க அணிஞ்சு நாங்க பார்க்கவே இல்லையே?”
“இவை வெறும் உருவகம் தான்.. என்னோட சந்தோஷ நாட்கள்ல மனசுக்குள்ள துக்க நாட்களை நினைச்சுக்குவேன்.. அதேபோலத் துக்க நாட்கள்ல சந்தோஷ நாட்களை நினைச்சுக்குவேன்”
“மொத்தத்தில சந்தோஷமோ, துக்கமோ உங்களைக் கட்டுப்படுத்தாம.. நீங்க அவற்றைக் கட்டுப்படுத்துவீங்க..”
“ரொம்ப சரியாகச் சொன்னீங்க..” என்றாள் அவள், சிரித்தபடியே.
*
