
ஏண்டிம்மா ஜானு என்றழைத்தபடி பக்கத்து வீட்டு மாமி அம்புஜம் வந்தாள்.
” வாங்கோ மாமி உள்ளே ” என்றாள் ஜானு.
” நீ தீவிர அனுமான் பக்தை என்பதற்காகக் கொடியில் காய்ந்த உங்க துணிகளை அந்த ஆஞ்சநேயரே வந்து வாலை வாலை ஆட்டிண்டு மடிச்சு எடுத்துண்டு உங்காத்துக்குள்ளே வருவாருன்னு நினைக்கவே இல்லை.”
” நான் சாயங்காலம் பார்த்ததிலிருந்து அப்படியே புல்லரிச்சுப் போய்க் கிடக்கேன்டிம்மா . எல்லோரும் ஷேமமா இருந்தா சரி, நான் கிளம்பறேன் “
அம்புஜம் மாமி போனதும் ஜானு தன் கணவன் வெங்கட்டைப் பார்த்து “இது உங்க வேலையா ? .
“அடுத்து நீங்க நடிக்கிற ராமாயண நாடகத்தில் அனுமன் வேஷம் போட ஒத்திகையா? “
“பாவம் மாமி நடிப்பை நிஜம்னு நம்பி பேசிட்டுப் போறாங்க”.
வெங்கட் சிரித்தபடி சொன்னான் “அப்போ என் வேஷம் , நடை எல்லாம் தத்ரூபமா இருந்திருக்குன்னு தானே அர்த்தம் “.
“நல்ல வேளை மாமி ஃப்ளாட்டில் எல்லோரையும் கூப்பிட்டு ஆரத்தி எடுக்காமல் விட்டாளே ” என்றாள் ஜானு
