
அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தாள் மீனா. கையில் இரண்டு முகமூடிகள்.
அம்மா: “என்னடி இது? பண்டிகைக்கா வாங்குன?”
மீனா: “இல்லம்மா. ஒண்ணு ஆபீஸுக்கு. இன்னொண்ணு வீட்டுக்கு.”
அம்மா: “புரியலையே?”
மீனா: “ஆபீஸ்ல சிரிச்ச பொறுமையான முகமூடி போடுவேன். டார்கெட் ஆகலைனாலும் பரவால்லன்னு சொல்லுவேன். பாஸ் திட்டுனாலும் தலையாட்டுவேன்.”
அம்மா, “வீட்டுக்கு?” என்று கேட்க,
மீனா, “வீட்டுக்கு வந்தா இன்னொரு முகமூடி. நான் சந்தோஷமா இருக்கேன்னு காட்டுற முகமூடி. நீங்கக் கவலைப்பட கூடாதுல்ல.”
அம்மா,”அப்போ உண்மையான முகம் எங்கடி?” என்றாள்.
மீனா , “அதுதான்மா தொலைஞ்சு போச்சு. ரெண்டு பக்கமும் நடிக்க நடிக்க அத மறந்துட்டேன்,” என்றாள்.
அம்மா அவள் கையில் இருந்த இரண்டு முகமூடிகளையும் வாங்கி குப்பையில் போட்டாள்.
அம்மா: “போதும். இனிமே அழுக வந்தா அழு. கோவம் வந்தா கத்து. நடிக்காத. நீ எப்படி இருக்கியோ அப்படியே இரு.”
மீனா கண்ணீரோடு சிரித்தாள். அதுதான் அவளுடைய உண்மையான முகம்.

👌