கரந்தை இந்து /எது என் முகம்?

  நிவிதா    என்னும்  அந்தப் பிரபல நடிகை   தனியறையில் பழைய  படங்களின்  ஸ்டில்  போட்டோக்களைப்  பார்த்துக்  கொண்டு   தன்  கடந்த  கால  வாழ்க்கையை  அசை  போட்டபடி அமைதியாக  அமர்ந்து இருந்தாள் .

ஹும் எத்தனை படங்கள் , எத்தனை விதமான வித்தியாசமான கேரக்டரில் அவள் நடித்து அத்தனையும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை.
எதிலும் சோடை போகாத அவளின் நடிப்பு எக்கச்சக்க புகழ், பணம், விருதுகள் எல்லாம் அள்ளிக் கொடுத்தது.
அப்போதெல்லாம் தன் திறமைமேல் அவளும் மிகுந்த கர்வம் கொண்டு பல டைரக்டர்களை, உடன் நடித்தவர்களை அலட்சியப்படுத்தி இருக்கிறாள்.
இன்று கையில் ஒரு படம் கூட இல்லாத சூழலில் தான் புறக்கணிக்கப் படும்போது தன் தவறு அவளுக்குப் புரிகிறது.
“எதற்காக இப்படி ஓடி ஓடி விதவிதமான வேஷம் போட்டு நடித்தோம் ,அதனால் என்ன சாதித்தோம்” என்று தன்னையே கேள்வி கேட்டுக் கொண்டாள்.
இப்போ எல்லாம் முடிந்த பின் கடைசியாக மிஞ்சியது தனிமையும், வெறுமையும் துணை வரும்போது புரிகிறது இது தான் உண்மையான முகம் என்று.
போலி முகத்திற்குத் தான் மரியாதை கிடைக்கிறது இந்த உலகத்தில் என்பதே நிதர்சனம்.
ஆனால் “காலங்கடந்த இந்த ஞானத்தால் யாருக்கு என்ன பயன் “என்று தன்னையே கேட்டு நொந்து கொண்டாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன