மாலா மாதவன்//மக்காச்சோளமும் ஆடுகளும்

இந்த முறை வானம் பொய்க்காது என்று நினைத்துப் பயிரிட்ட மக்காச்சோளப் பயிர்களைப் பார்த்தவாறு இருந்தாள் வள்ளி.

“என்னாச்சு! இந்த முறை தான் நல்ல விளைச்சல் கண்டுருச்சே! ஏண்டி சோகம்?” கணவனின் குரலில் அசைந்தவள்.

“காசு வருமாய்யா?” என்றாள்.

“அவங்க என்ன தராங்களோ அதான் வள்ளி வரும்.”

“தோ! பாரு! நாம வயலுக்குக் குறுக்கால பலகை போட்டு அங்கிட்டு தாவினா தூரம் குறைச்சு தான். ஆனா பயிர்கள் அழிஞ்சுடும். இப்படி வயல்ல பலகை போட்ட மாதிரி சுளுவா நம்ம பொருளை இடைத்தரகர் கிட்ட கொடுக்கறது நம்ம வாழ்க்கைக்கு நிறைவான வழி சொல்லாதுய்யா. நாம மக்காச்சோளம்ன்னா இவங்க தான் ஆடுகள்.”

வள்ளியின் பேச்சில் மக்காச்சோளக் கட்டைத் தூக்கி அவள் தலையில் வைத்தான் அவள் கணவன்.

“வா! பிழைக்கலாம்!”

3 Comments on “மாலா மாதவன்//மக்காச்சோளமும் ஆடுகளும்”

  1. அவ்வளவுதான். யாரை எதிர்பார்க்கணும்? முடிஞ்ச உதவிகளை அரசாங்கம் செஞ்சிகிட்டுதான் இருக்கு. இனிமே தன் கை தனக்குதவின்னு இருந்தா நல்லபடியா வருமானம் பாக்கலாம். நல்ல கருத்து மா. வாழ்த்துகள்

Comments are closed.