மரு.ச.கந்தசாமி/விதைகள்

“ஏம்பா ஆட்டத் தூக்கி மாட்டுல போட்ட கதையாத்தான் இருக்குது ,இங்க நம்ம நிலைமை ” என்று புலம்பினான் முனியன். வீரையனோ” ஆமாம்பா நெல்லு போட்டு விளையும்னு நினைச்சு விளையாம, மக்காச்சோளம் போட்டா மக்காச்சோளம் மக்கிப்போகுது”. விளைச்சலும் இல்லை எங்க நம்ம மங்கையர் மக்காச்சோளத்தை தூக்கிட்டு சந்தைக்குப் போகுது எங்கேயும் விலை போக மாட்டேங்குது?! என்று அவனும் புலம்பினான் .முனியனோ” வயிற்றுக்கு வழியே இல்லாம நேரத்தில, இந்த ஆட்டுக்கும் மாட்டுக்கும் நாம் பயிரிட வேண்டி இருக்கே? வானம் பார்த்த பூமியா இருந்து இப்படி மழை பொய்க்க நாம ஏமாந்து போவோமோ? என்று பயந்தான். ஊருக்குள்ள மத்த தொழில் பண்றவங்க எல்லாம் நல்லா இருக்க, வயிறார சோத்துக்கு வழி பண்ற நமக்கு இந்த நிலைமையா?” என்று முனியன் மேலும் முனங்கினான். ஆம் இந்த நல்லூரில் பெயருக்கேற்றார் போல நல்லவர்கள் வாழ்ந்தாலும், விவசாய நிலம் பரவி இருந்தாலும், மழை பொய்க்க நீர் நிலை இல்லாத காரணத்தால், வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிக் கொண்டே போகிறது. வினை விதைத்தவன் வினைஅறுப்பான், என்பது போல விதை விதைத்தவன் பயிர் அறுக்க மகசூல் பார்க்கும் காலம் என்னாளோ? … என்றனர் ஊர் மக்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன