ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 35,

8.12.2021 –  புதன் 


ஆசிரியர் பக்கம்


மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்.

மோகினி: நீங்கள் இப்போதெல்லாம் வெளியே போவதில்லையா?

அழகியசிங்கர் : அவசியமான இடத்துக்கு மட்டும் போகிறேன்.

ஜெகன் :  யாருக்கு இந்த முறை சாகித்திய அக்காதெமி பரிசு கிடைக்கும்.

மோகினி :  ஒரு பெண் எழுத்தாளர் தீவிரமாக முயற்சி செய்வதாகக் கேள்விப் பட்டேன்.

அழகியசிங்கர் : யாருக்குக் கிடைத்தால் என்ன? அதில் எனக்கு அக்கரை இல்லை.

மோகினி :  உண்மைதான்

அழகியசிங்கர் : எந்தப் பரிசும் புத்தகங்களுக்காகக் கொடுக்கப் படுவதில்லை.  ஆட்களைப் பார்த்துத்தான் கொடுக்கிறார்கள்.

ஜெகன் :  இன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

மோகினி :  நாட்டைக் காப்பவர்களுக்கே இப்படி நடந்து விட்டது சோகம்.

ஜெகன் :   முப்படையின் தலைவர் ஸ்ரீ பிபின் ராவத் மரணம் பெரிய துயரத்தைத் தரக்கூடியது. 

அழகியசிங்கர் : உண்மைதான் அவர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்.  

மோகினி :  இதுமாதிரி விபத்தை அறியும்போது எதுவும் ஓடவில்லை.

ஜெகன் :  ஆமாம்.  4 மணிக்குத்தான் தொலைக்காட்சியிலே இந்தச் செய்தி தெரிந்தது. 

மோகினி :  தினந்தோறும் 300 பார்க்கிறார்கள் உங்கள் டெய்லியை..

அழகியசிங்கர் : ஆமாம்.

மோகினி :   நகுலன் மலர் எந்த நிலையில் உள்ளது.

அழகியசிங்கர் :  கூடிய சீக்கிரம் கொண்டு வந்துவிடுவேன்.

மோகினி :  படைப்புகள் கிடைத்ததா?

அழகியசிங்கர் : இன்னும் பலர் நகுலனுக்காகச் சிறப்பு மலர்கள் கொண்டு வருகிறார்கள்.  கும்பகோணத்தில் சாகித்திய அக்காதெமி ஒரு விழா நடத்தி முடித்துவிட்டது.

மோகினி : நாமும் கொண்டு வரப்போகிறோம் ஒரு மலரை.

ஜெகன் இன்று பேசியது போதும்.

அழகியசிங்கர்.  இரவு வணக்கம்.

( எழுதியது இரவு 11.18)