தாராள மனம் கொண்ட மாணவன்/தமிழில் : அதங்கோடு அனிஷ்குமார்


சீனநாட்டுப்புறக்கதை

லின் பியாவோ அடிக்கடிவகுப்பிற்கு வராமல் இருந்தான்.அவனை கல்லூரியை விட்டு வெளியேற்ற முதல்வர் முடிவு செய்திருந்தார்.அவனை அழைத்து வர ஒருவரை அனுப்பினார்.

முதல்வர் சாப்பிடப்போகும் நேரத்தில் அவன் வந்தான்.

“இது தான் நீ வரும் நேரமா?”கோபத்துடன் முதல்வர் கேட்டார்.

“என்னை மன்னித்து விடுங்கள் ஐயா.”நான் இன்று கல்லூரிக்கு தாமதாகத்தான் கல்லூரிக்கு வந்தேன்.காரணம் எனக்கொரு தங்கக்கட்டி கிடைத்தது”என்றான் லின்.

“தங்கக்கட்டியா?”

கண்கள் விரிய ஆச்சரியத்துடன், நீ அதை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்டார்.

“ஒரு பிரமாண்டமான வீடு கட்டவும், நிறைய நிலம் வாங்கவும், நிறைய மாடுகள் வாங்கவும் முடிவு செய்திருக்கிறேன்”எனச் சொன்ன மாணவன், சிரமம் எடுத்து எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த உங்களுக்கும் கொஞ்சம் பணம் தரலாம் என்றிருக்கிறேன் என்றான்.

அவன் பதிலைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த முதல்வர் அவரோடு அவனை சாப்பிட அழைத்தார்.அவன் பல நாள் பட்டினி கிடந்தவன் போல சாப்பிட்டான்.ஆனால் முதல்வர் அவரது உணவைத் தொடக்கூட இல்லை.அவர் லின் எவ்வளவு கொடுப்பான். அவரின் நீண்ட கால ஆசையாகிய ஒரு நெல் வயல் வாங்க வேண்டும் என்பது நிறைவேறுமா என யோசித்துக்கொண்டிருந்தார்.திடீரென்று ஒரு பகல் கனவிலிருந்து விடுபட்டார் போல, “நீ அந்த தங்கக் கட்டியைப் பாதுகாப்பான இடத்தில் தானே வைத்திருக்கிறாய்”என்று கேட்டார்.

“எனக்கு அதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை.அதற்குள் என அம்மா என்னை உலுக்கி எழுப்பி விட்டார்”என்றான் லின்.

“என்னது?நீ சொன்னது எல்லாம் கனவா?.அதிர்ந்து போய் கேட்டார் முதல்வர்”.
அவன் தலையாட்டினான்.

அவர் மிகவும் சிரமப்பட்டு தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டார்.

“கனவில் கூட என்னை நீ நினைவு வைத்திருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது”.
உண்மையாகவே உனக்கு தங்கம் கிடைக்கும் போது என்னை நினைவு வைத்துக்கொள்.இப்போது நீ போகலாம்”என்றார்.

அவன் விடை பெற்றுச்சென்ற பிறகு தான் அவர் அவனை எதற்காக
வரவழைத்தார் என்பது நினைவுக்கு வந்தது.

ReplyForward