
காமேஷ் பக்கத்து வீட்டு கோகுல் அண்ணாவை கையோடு அழைத்து வந்து
முன் அறையில் நாற்காலியைப் போட்டு உட்காரவைத்தான்.
ஒன்றும் புரியாமல் கோகுல் முழித்தான்.
“என்னடா காமேஷ் என்னை ஏன் கைது பண்றே”என்று கேட்டான்.
“அண்ணா, நீங்கக் கொஞ்ச நேரம் அப்படியே உட்காருங்க.
என்னையே பாருங்க.
எனக்காக அண்ணா, பிளீஸ் “என்றான் காமேஷ்.
“சரி.என்னமோ பண்ணு.
தலையைக் கொடுத்தாச்சு. எப்படி தப்பிக்கிறது!”
காமேஷ் வரைய பென்சில், காகிதம் போர்ட் சகிதம் நொடியில் கோகுல் முன் தயார் நிலையில் நின்றான்.
“சரிடா, நான் உட்கார்ந்தபடி தூங்கிக்கட்டுமா?”
“தூங்க கூடாது அண்ணா. உங்களை அப்படியே வரயனும்.
டி வி பாருங்க.” என்று தொலைக்காட்சி பெட்டியை முடுக்கி விட்டு அவன் வேலை கவனிக்க ஆரம்பித்தான்.
கோகுல் கொஞ்ச நேரம் ராதிகா சீரியல் பார்த்துக் கொண்டே தூங்கி விட்டான்.
நல்லவேளை
காமேஷ் அவன் அலை அலையா வாரியத் தலை, கண்ணாடி.போட்ட முகம் வரைந்து முடித்து விட்டான்.
இன்னும் கொஞ்சம் தான் வரைய மீதி இருக்கு.
புகைப்படம் வரைந்து முடித்து நகர்வதுக்குள் கோகுல் எழுந்து
“ஏன்டா காமேஷ், நான் இவ்வளவு மோசமாவா இருக்கேன் பார்க்க!?அதனால் தான் கல்யாணத்துக்குபொண்ணு கிடைக்கலையா? “
கோகுல் தங்கை ராஜி ,ஓடி வந்து “அண்ணா, போன வாரம் பார்த்த பொண்ணுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்காம். நாளை நம்ம வீட்டுக்குக் கலந்து பேச மாமாவும் மாமியும் வரா.”என்றவள்
புகைப்படம் பார்த்துப் பிரமித்துப் போனாள் .
