விஞ்ஞானி/நரியே நரியே ஓடி வா

வளைக்குள் இருந்து
வானத்தைத் தேடுது
நண்டு மனசு

முன்னே ஒரு அடி
நகர்ந்தாலும்
பின்னே நாலு நண்டுகள் இழுக்குது

முடியாமல் முடிவில் மனசு
நரி வாலுக்காகக் காத்திருக்கு
வெளியே வர.