
எதுவும் சொல்லாமல் வாசல்
துளசியையே பார்த்துக்கொண்டிருந்தாள்
தானில்லாவிட்டால் யார் இதை
தண்ணீர் ஊற்றி
வளர்க்கப் போகிறார்கள்
என்ற நினைப்பில்
அவள் மனம் பட்டுப் போனது
கல்யாணம் முடிந்த கையோடு
இதைப் புகுந்த வீட்டிற்கு கொண்டு போய் விடுகிறேன்
என்று அம்மாவிடம் சொன்னபோது அம்மா அழுதாள்
“நீ போனதுக்கப்புறம் இதை நீ ன்னு
நெனச்சு பார்த்துப் பார்த்து வளர்க்கனும்னு
அப்பா சொன்னாரும்மா” என்றாள்
அந்த நிமிடத்திலேயே அவள்
தன்னின் அரிய ஒன்றை
அந்தத் துளசி செடியில் விட்டு விட்டு
மெல்ல விடை பெற்றாள்
