
சிறு வயது முதலே தான் அழகிலே என்று மன அழுத்தத்தில் வளர்ந்தான் முத்து.பள்ளியில் படிக்கும் போதே கண்ணாடி போட, “மூக்குக் கண்ணாடி முத்து” என்று அவனை நண்பர்கள் கேலி செய்தனர். அவன் தாயோ, “முத்து நீ கண்ணாடியிலும் அழகுடா,” என்றாள். முத்துவோ, “நீயுமா என்னைக் கிண்டல் செய்கிறாய்?” என்றான். காலம் சுழல முத்துவின் கண்ணாடி சோடா புட்டி ஆனது. முத்து படிப்பிலோ கெட்டி. தன் தாழ்வு மனப்பான்மையை தூர எறிந்து, இன்று முத்து கலெக்டர் ஆகி விட்டான். அவன் படம் நாளிதழில் முதல் பக்கத்தில் பிரசுரமானது. அவன் படத்தைப் பார்த்து அவனே வியந்து போனான்.

கண்ணாடி மூலமாக படிப்பில் முதல் நல்ல விஷயம்.