ஸ்ரீராம் /முகராசி

‘இந்தப் படத்துக்குத் தகுந்த ஒரு கதை எழுதுங்கள்’ என்று சொல்லி வெளியிடப்பட்டிருந்த தன் படத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டான் சாரதி. கடைசியில் இப்படியாவது ஒரு பிரபல்யம் கிடைத்ததே என்று தோன்றியது.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கிராமத்திலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்தவன், நடிக்க எவ்வளவோ வாய்ப்பு கேட்டும் கிடைக்கவில்லை.
நகைச்சுவை வேடங்களில் ஏதாவது இடம் கிடைக்குமா என்று ஆலாய்ப் பறந்து, அதுவும் கிடைக்காமல், இப்படி அலைந்ததனால் கிடைத்த பழக்கங்களை வைத்து இயக்குனருக்கு உதவியாளாய் சேர்ந்தால் உதவி இயக்குனராக ஆகி இயக்குனராக மாறலாம் என்கிற அவன் கனவும் தகர்ந்தது!
திறமை இல்லை என்று ஒதுக்கப்பட்டு சரியான வாய்ப்பு கிடைக்காமல் ஒரு எடுபிடி ஆள் போலவே தான் வேலை பார்த்து வந்தான். இந்தப் பழக்கங்களினால் ஒரு சில படங்களில் மிகச் சிறிய வேடங்கள் கிடைத்து நடித்தும் வந்தான். எதுவும் சொல்லிக் கொள்ளும்படி பெரிதாக அமையவில்லை. இந்த நிலையில் இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் இந்த அளவுக்காவது தான் புகழ் பெற்றிருக்கிறோமே என்று சற்று பெருமையாகக் கூட இருந்தது சாரதிக்கு.
ஏதோ ஒரு படத்தில் தான் செய்த இந்த வேடத்திற்கான இந்தத் தோற்றம் யாரையோ கவர்ந்து, தன்னை வைத்து இப்படியொரு உபயோகம் காண தோன்றியிருக்கிறதே என்று ஆறுதலும் கொண்டான்.

2 Comments on “ஸ்ரீராம் /முகராசி”

  1. கதை நல்லாருக்கு, ஸ்ரீராம். இயல்பான யதார்த்தமான கதை. இப்படி எத்தனையோ கலைஞர்கள் சினிமா உலகில் இருக்கிறார்களே.

Comments are closed.