
இன்ஸ்பெக்டர் சேகரன், ஐந்து வயது சிறுமி புஷ்பாவை அன்பாக விசாரித்தார்.
“சொல்லு பாப்பா அந்தத் திருடனை எப்ப பாத்தே?”
“நைட் பாத்ரூம் போக எழுந்தேனா இருட்டா இருக்குமே அப்பதான்.”
புஷ்பாவோட தந்தை சுந்தரம்,
”அதெல்லாம் ஒண்ணும் திருட்டு போகலை, அது சும்மா சொல்லுது”
சுந்தரத்தோட நண்பர்தான் இன்ஸ்பெக்டர் சேகரன், பக்கத்து ஃபிளாட்.
“நீ பயப்படாதே புஷ்பா அப்பா ஒண்ணும் சொல்லமாட்டார் என்ன பண்ணினான் மேலே சொல்லு”
“அன்னிக்கு அப்பா அம்மா சண்டை
அம்மா பீரோ வச்ச ரூம்ல, நான் அம்மா பக்கம்.அப்பா சோஃபால. நைட் திருடன் மெல்ல வந்தான் பீரோ பக்கத்துல நின்னான். இப்படிதான் இருந்தான் தான் நோட்பேடில் வரைந்த படத்தைக் காட்டினாள்”
“பின்னால் நின்றிருந்த சுசிலா குப்னு சிரிச்சா.இது உன் அப்பா படம்டி, லூசு மானத்தை வாங்கறயே”
