
எனக்குத் தெரியாதுனு நினைச்சிருக்கு மும்தாஜ், எங்கே கூட்டிட்டுப் போறானு.
அந்த முரடன் சலீம் அன்னிக்கு வந்தப்ப மும்தாஜ் தனியா சமையல் பண்ணிட்டிருக்கு வாப்பா வர நேரமாச்சே.
அவன் எதுவும் பேசலை அவளைத் தரதரனு இழுத்துட்டு வந்தான் என் கண் எதிர்லயே கயித்துக் கட்டில்ல தள்ளினான்.
சிறுசுல இருந்து என்னை வளத்த மும்தாஜையா…என் சக்தி பூரா திரட்டிக் கயித்தை அத்துட்டு வந்து அவனை மிகப் பலமா முட்டினேன் படாத இடத்தில் பட்டுச் சரிந்து விழுந்தான்.
மும்தாஜ் என்னை அணைத்து அழுதாள் அதே மும்தாஜ் இன்னிக்கு என்னைக் கூட்டிட்டுப் போறா, பரவாயில்லை இதுவும் குர்பானிதான்.
